பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (கு - உ) பொட்டு = நுழைவாயில்: தொளை; "சாடு குன்றது பொட்டெழ" - திருப்புகழ் 105; "மின்னயில் கொண்டொரு வெற்புப் பொட்டுப்பட" - திருப்புகழ் 492 கிரெளஞ்சம் புழைபட் டழிய" தணிகைப் புராணம், புழை = உட்டொளை, சூர்பொட்டாகக் குத்திய வேலா - திருப்புகழ் 1119 கட்டாரி = குத்துவாள், ஈட்டி - "ஈட்டி விழியார்: "ஈட்டி வரிவிழி - திருப்புகழ் 1278, 198 தான் தப்பி நெறி தவறினபடியால் தன்னை இழிவுபடுத்தத் தப்பிப்போன எனக்கு என்று தன்னை உயர்திண்ையிற் குறிக்காமல் தப்பிப்போன தொன்றற்கு என்று தன்னை அஃறிணையிற் குறிக்கின்றார். இது திணைவழுவமைதி இழிப்பினும் பால்திணையிழுக்கினும் இயல்பே' 'நாம் அரன் உடைமை' என்பது இழிப்பின் உயர்திணை அஃறிணை யாயிற்று - நன்னூல் சூத்திரம் 379, எட்டாத ஞானகலை - கதறிய கலைகொடு சுட்டாத் தீர்பொருள் பதறிய சமயிகள் எட்டாப் பேரொளி' - திருப்புகழ் 1152 இறைவன் திருவருளின்றி எட்ட முடியாதது ஞானகலை 35. பிரார்த்தனை புத்தி தெளிய பத்தித் துறையிழிந் தாநந்த வாரி படிவதினால் புத்தித் தரங்கந் தெளிவதென் றோபொங்கு வெங்குருதி சீமெத்திக் குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட சுட்டியிலே குத்தித் தரங்கொண் டமரா விதிகொண்ட கொற்றவனே. (அந்) பொங்கு வெங்குருதி. கொற்றவனே! பத்தித் துறை...... தெளிவதென்றோ! (பொ - உ) பொங்கி எழுகின்ற (வெம்) வெப்பம் உள்ள (, J ரத்தம் (மெத்தி) நிறைந்து (குதிகொள்ள) கொப்புளித்துக் குதித்துச் சொரிய, (வெஞ்சூரனை) கொடிய சூரனை (விட்ட சுட்டியிலே) ஒளிவிட்டு விள்ங்கும் நெற்றித் தலத்தில் குத்தி (தரம்கொண்டு) மேன்மை பெற்று (வெற்றி அடைந்து), (அமராவதி) தேவர் உலகைக் (கொண்ட) கைக் கொண்ட (கொற்றவனே) வெற்றியாளனே! (பத்தித்துறை) பத்தி என்கின்ற இறங்கு துறையில் (இழிந்து) இறங்கி, (ஆன்ந்தவாரி) ஆனந்தம் என்னும் கடலிற் (படிவதினால்) குளித்து அனுபவித்தலால் (புத்தித் தரங்கம்) அறிவு அலைகள் உணர்ச்சிகள் (தெளிவது என்றோ) தெளிவடைவது எந்நாளோ! ஞான உணர்வு பெறுதல் எந்நாளோ! என்றபடி (சு - உ) சூரனை அட்டுப் பொன்னுலகைக் காத்த வீரனே! நான் பத்தி வழியில் இறங்கி ஆனந்தம் அடைய என் மனக்கலக்கம் என்று தெளிவடையும்!