பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வேல் வாங்கு வகுப்பு 443 2. ஜெயஜெய என்று (இசை) முருகன் (திருப்) புகழைப் (பரவிய) பேர்ற்றிப் பாடின எங்க்ளுடைய (கொடுங்கிலி) கொடிய (கலி) . வறுமையாதிய தேடுகள் (தேசாந்தரமே) அயல் நாட்டுக்கே (சாய்ந்தது) வெளி ஏறி விட்டன - எங்களை விட்டு வெகுதுாரம் விலகிப்போயின (வேல் வாங்கவே) 3. (செயல்) தங்களுடைய செய்கையும், (உரை) வாக்கும், நஞ்சு உறழ் விஷம்போன்றனவாய் (மயல்) மயக்க அறிவைக் கொண்ட நெஞ்சத்தை உடையவர்களும், வஞ்சக எண்ணத்தினர்களும், (தி மான்கதர்) தீய கோபத்தினர்களும், (தாம் ஏங்கினர் அச்சம்) கொண்டு மனம் தளர்ந்தார்கள் (வேல் வாங்கவே) 4. (சிகரம்) மலை உச்சிபோல எழுகின்ற (தரங்கிதம்) அலைகள் உண்டாதலையும், (மகர) மகர மீன்கள் நெருங்குதலையும் உடைய பெரிய கடல் - தீ மூண்டு நெருப்பிற்பட்டு - (தன்வாய் மாண்டது) தனது ஒலியும் (மாண்டது) அடங்கி ஒடுங்கிற்று (வேல் வாங்கவே) 5. (தெரியலர்) பகைவர்கள், சென்று அடைந்த (திசை களில்) திக்குகளில் இருந்த (எண்களி) அஷ்ட கஜங்களும் எட்டுத் திக்கில் இருந்த எட்டு யானைகளும், சிம்ப்ெழ சிம்பு எழ அச்சத்தால் | (ஒலி செய்ய), (ம்ாறாம் கிரி) பகைமை பூண்டிருந்த கிரவுஞ்ச கிரி (நூறாம் தொளை) தொளை நூறாம் - தொளைபட்டு நூறுதல் ஆம் பொடிபட்டு அழியும் அல்லது - தொளை நூற்றுக்கணக்காம் (வேல் வாங்கவே) 6. (சிகர நெடுங்கிரி) சிகரங்களை முடிகளை உடைய பெரிய மலைகள் வாய்விட்டு பிளவுபட்டு குகைகள் திறந்தன; திக்குகளின் (அந்தமும்) முடிவிடங்கள் வரையும், (லோகாந்தமும்) லோகங்களின் முடிவிடங்கள் வரையும், (நீர்) பிரளய்நீர் (தேங்கின) நிறைந்தன (வேல் வாங்கவே) 7. சிறையுள், (அழுந்திய) அமுக்குண்டு கிடந்த குறைகள் 激 து), குறைபாடு இழிந்து செயங்கெர்டு) வெற்றியுட்னே த்வேந்திரர்கள் (சேண்) விண்ணுலகங்களில் ஆட்சி புரிந்தனர் (வேல்'வ்ாங்கவே) 7தேவேந்திரர் பலர் வெவ்வேறண்டங்களில் இருப்பவர் "யாவரும் பரவும் இந்த்ரரும்" இந்திரர் என் று பன்மை படச் சொல்லலாயிற்று பலருண்டாதலால் - தக்கய்ாகப்பரணி 18. உரை.