பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. புயவகுப்பு 463 6. (மதியென) நிலவுபோலவும், (உதயரவி என) உதய சூரியன் - காலைக் கதிர் இளஞ்சூரியன் போலவும், (வளைபடு) வளைந்து வட்ட வடிவுடன் (தோல்) தோல் புனைந்தாய், (விசாலம்) அகன்றுள்ளதாய் (நீ லமலி) கருநிறம் நிறைந்ததாயுள்ள, பரிசைப்படை கேடயம் என்னும் ஆயுதத்தை கொண்டு ஏந்தி நின்று (உழன்று) அதைச் சுழற்றிச் சுழற்றிச் (சாதிக்க) வெற்றியை நிறைவேற்ற ஜெயம்பெற (முந்தின) முற்பட்டு விளங்கின (வாகைப் புயங்களே) 7. (மன குண சலனம்). மன சலனம், குண சலனம் - மனம் ஒரு நிலைபடாது நிலையற்றிருத்தல், குணம் ஒருநிலை பெறாது நிலையற்றிருத்தல் - (மலினம்) மாசு (அல்லது) பாவம் (இல்) இவையில்லாததும், துரிய அதீத துரிய நிலைக்கு மேற்பட்டதும், சுகாநுபூதி இன்பமே பயக்கும் அனுபவ ஞானமுமான, மவுன நிரக்ஷர மந்திரம் - மெளனம் சும்மா இருத்தல் என்னும் மந்திரம் - அகூடிரங்களொடு கூடாததான மந்திரம் (பொருந்தி) அத்தகைய மெளன மந்திர நிலையினில் பொருந்தியதாய், மார்பில் - மார்பிலே, திகழ்ந்தன - விளங்கின (வாகைப்புயங்களே) யின் விளக்கத்துடன் நன்கு பொருந்துகின்றது. அந்த உரைப்பகுதி பின்வருமாறு: மார்பொடு விளங்க - "முநிவர்க்குத் தத்துவங். களைக் கூறி உரையிறந்த பொருளை உணர்த்துங் காலத்து ஒரு கை மார்போடே விளங்கா நிற்க. இறைவன் மோன முத்திரை யத்தனாய்த் தானாயே யிருந்து காட்ட ஊமைத் தசும்புள் நீர் நிறைந்தாற்போல ஆனந்த மயமான ஒளி மாணாக்கர்க்கு நிறைதலின். அதற்குரிய மோன முத்திரை கூறிற்று". (ஊமைத் தசும்பு - வாயில்லாத குடம்). ஒருகை மார்பொடு விளங்க - என்பதற்கு மார்பினிடத்தே மெளன மந்திரத்தைப் பேணா நிற்க' என்பது வேறுரை, மார்பகத்தில் வைத்த கரதலமும் கந் கலிவெண்பா 50, H