பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 - முருகவேள் திருமுறை 19:திருமுறை சித்துக்கள் எல்லாம் பெரிதல்ல, ஒரு உண்மையை உனக்கு இதோ தெரிவிக்கின்றேன், அதுதான்). 73-84. பார்வதி மைந்தன், மன்மதனிலும் அழகன், ஈகைக் கடல், சரவணபவன், அறிஞன், மெளன. சுகாசனன், மூலகாரணன், சகலகலா வல்லவன், வள்ளி நாயகன், கடலைக் கோபித்த(வன்) திருமால் மருகன், அறுமுகன், வெட்சி மாலையன், கிரவுஞ்சத்தை வேலால் அட்டவன், நக்கீரருக்கு அபயம் அளித்தவன், கோபமற்ற குணப்பெருஞ் செல்வன், வேத ராணங்களுக்கு உற்பத்தி ஸ்தானமானவன், மெளன. ஞான {: சிவனார் மகிழ அகத்தியருக்குத் தமிழ் போதித்தவன், வேதமூர்த்தி, திருத்தணியில் வீற்றிருக்கும் கார்த்திகேயன். 85.96. வேள்வி காவலன், பொன்னுலகில் தேவர்கள் குடியேற வழி திறந்தவன், பகைவர்களையும் அசுரர்களையும் தண்டிப்பவன், அமராவதியைக் காத்தவன், ஞானசொரூபன், ஞான யன், ஞானகுரு, தேவர் சிகாமன், பிரமனைப் புறக்கணித்தவன், என்றும் புதியன், அடைந்தார்க்கு அருள்பவன், மேருவை அட்டவன், தாருகனைப் பங்கப்படுத்திய பிரான், சிறந்தோன், சேவற் கொடியுடன் போர்க்களத்தில் மயில்மிசை வந்த வரதன், பயமிலி, பேரறிஞன், சுவாமி, கருத்துக்கு எட்டாதவன், சத்ய சொரூபன், புகழ்ப்ெற்ற கலைச்செல்வன், அடியாரால் விரும்பப்படுபவன், கவலையற்றவன், அசுரர்களுக்குப் LLLD ஊட்டுபவன், செவ்வேள், கங்கையின் த்திரன், சூரனை அட்டவன், வினையை அறுப்பவன், னைத்ததை அளிப்பவன், என் மனத்துயர் ஒழித்து, என்னை முன்னுக்குக் கொண்டுவந்த க்ருப்ைக்கடல் ஆகிய_வேலாயுதக்_கட்வுளின் திருப்புகழைக் கற்றவரே, உண்மையில், ஞானிகள் போற்றும் சக்ல சித்தர்கனினும் பிரசித்திபெற்ற மஹா சித்தர் ஆவார்.