பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை 63. தன் அனுபவம் கூறினது 1பாதித் திருவுருப் பச்சென் றவர்க்குத் தன் பாவனையைப் ് நிர்த்னைப் போர்வே லனைச்சென்று போற்றியுய்யச் சோதித்த ம்ெய்யன்பு பொய்யோ அழுது தொழுதுருகிச் சாதித்த புத்திவந் தெங்கே யெனக்கிங்கன் சந்தித்ததே. (பொ-உ) (பாதித் திருவுரு) தனது திருவுருவத்தில் உமாதேவியின் பாகமாகிய பாதி } உடைய சிவபிரானுக்குத் (தன் பாவனையை பிரணவத்தின் பொருள் இன்னதென்று தான் கொண்டிருந்த கருத்தைப் போதித்த எடுத்து உபதேசித்த நதனை நாயகனை, போருக்கு உற்ற வேல் ஏந்திய முருகனை - (சென்று) அடைந்து, போற்றி (நான்) உய்வதற்குச் (சோதித்த) அவரால் சோதிக்கப்பட்ட (மெய்யன்பு எனது மெய் அன்பானது (பொய்யோ) பொய்யாகுமோ (ஒருகாலும் ஆகாது என்றபடி) அவனது திருஅருளை நினைந்து அழுதும் தொழுதும் யும் (சாதித்த) நிலைப்பட்ட இந்த எனது புத்தியானது (எங்கே) எங்கிருந்து என்ன புண்ணியவசத்தினால் எனக்கு (இங்கன்) இவ்வாறு (சந்தித்தது) கிடைத்தது (இங்ங்ணம் கிடைத்தது.அவனது திருவருளே என்றபடி) (சு உ) சிவகுருநாதனாம் முருகனை நான் போற்றி உய்ய அவரால் முன்பு சோதிக்கப்பட்ட எனது மெய்யன்பானது எங்கேனும் பொய்யாகும்ோ ஒருகாலும் பொய்யாகாது. அவன் திருவருளை நினைந்து அழுதும், தொழுதும், உருகும் இந்த நிலைத்த புத்தி எனக்கு எப்படிக் கூடிற்று அவன் திருவருள்ால்தானே என வியக்கின்றார் அருணகிரியார். (கு உரி1"மரகதம் பெணாகம் அயலணி சிவன் புராரி' 205. தன்து அன்பு மெய்தானோ என்பதை நன்கு சோதித்த பின்னரே முருகவேள் தன்னை ஆட்கொண்டனர் என்பதும்,அழுதும்,தொழுதும், உருகியும் தனக்குக் கிடைத்த நிலைத்த புத்தியானது அவரது திருவருளால்ன்றி வேறு எப்படி தனக்குக் கிடைத்திருக்கும் என்பதாகவும் கூறி வியக்கின்றார்" நிலைத்த புத்திதனைப் பிரியாமற் கனத்த் தத்துவ முற்று. நித்திய சித்தருள்வாயே" - என வேண்டினவராயிற்றே இவர் (திருப்புகழ் 294) 64. யமனை வெருட்டல் 1.பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறிய வெட்டிப் புறங்கண் டலாது விடேன்வெய்ய சூரனைப்போய் முட்டிப் பொருதசெவ் வேற்பெரு மாள்திரு முன்புநின்றேன் கட்டிப் புறப்பட டாசத்தி வாளென்றன் கையதுவே.