பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்கம் {}\} (பெ. உ.) பட்டிக் கடாவில் களவு எண்ணங்கொண்ட எருமைக் கடாவின் மேல்வரும் (அந்தகா) எமனே உன்னை (நான்) (பார்) இவ்வுலகோர் யாவரும் அறியும்படி - (அவர்கள் முன்பு ಸಿಲ್ಲ!) வெட்டி, நீ முதுகு காட்டி ஒடும்படிச் செய்யாமல் நான் உன்னை விடப்போவதில்ல்ை (அந்த வெய்ய கொடிய சூரனிடம்போய் அவனை (முட்டி) தாக்கிப் போர் புரிந்த செவ்விய வ்ேற்பெருமாளின் அழகிய சந்நிதியில் நிற்கின்றேன் நான் (கட்டிப் புறப்படடா) நீ வீச எடுத்த பாசக் கயிறு தண்டாயுதம் முதலிய உன் ஆயுதங்களை எடுத்துக் கட்டிக்கொண்டு வந்த வழியைப் பார்த்துப் புறப்பட்டுப் போடா! (அங்ங்னம் போகாது எதிர்த்து வந்தால் உன்னை வெட்டிப் புறங்காண வைப்பேன் இது நிச்சயம் என்றபடி) (சத்திவாள் என்றன் கையதுவே) - ஞான சத்தி என்கின்ற ஞான வாள் என் கையகத்தே உள்ளது.இதைக் கவனிப்பாயாக (சு உ) அடா அந்தகா நான் முருகவேளின் சந்நிதியில் இருக்கின்றேன்; நீ என்னை எதிர்த்தால் உன்னை வெட்டிப் புறங் காண்பேன்; ஆதலால் வந்தவழியைப் பார்த்து மரியாதை யாப்ப் புறப்பட்டுப் போடா. (கு உ) பட்டி = களவு "பட்டி மாடான நான்" - திருப்புகழ் 338 இந்தப் பாடலால் திடபக்தி நன்கு புலப்படும். "நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்" - என்னும் அப்பர் பெருமானது திடபக்தியையும் (6-981) யாமார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம், கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் என்னும் மணிவாசகரது திடபத்தியையும் (சதகம் 30: அச்சப்பத்து 10) அருணகிரியார் கொண்டிருந்தனர் என்பது விளங்குகின்றது. சத்தி வாள் - என்றது ஞான வாள். நமன்வரின் ஞான வாள் கொண்டே எறிவன் என்றார் திருமூலரும் (2968) ‘பரமசுக மவுன கட்கம். யமன் முடி துணிக்க' - வேடிச்சி காவலன் வகுப்பு:இதனால் அருணகிரியார் திருமூலரைப்போல உயர்ந்த ஞான நிலையைக் கொண்டிருந்தார் என்பது பெறப்படும். அலங்காரம் பாடல் 25, 69ம் | ЈгТЛГАНебѣ, 65. பிரார்த்தனை யம பயம் நீங்க வெட்டுங் கடாமிசைத் தோன்றும்வெங் கூற்றன் விடுங்கயிற்றாற் கட்டும் பொழுது விடுவிக்க வேண்டுங் கராசலங்கள் எட்டுங் குலகிரி யெட்டும்விட் டோடவெட் டாதவெளி மட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே. (அந்) சராசலங்கள்.மயூரத்தனே! வெட்டுங்-வேண்டும்.