பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 65 அன்பிலாதவர்கள்; ர்கள் ஞானம் நன்றாயிருக்கின்றது என்றுதான் பரிகசிக் ண்டும். (கு உ) 'நீரிற் குமிழி இளமை - நிறை செல்வம் நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில் எழுத்தாகும் யாக்கை" - நீதிநெறி விளக்கம் (காப்பு கரவாதிடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாப் - என்றார் தந்தரநுபூதியிலும் (7) இடுதலும் ஹேற்குமரனை நினைதலும் இணைபிரியாதவை; குமரனை நினைத்தே இடுதல் வேண்டும். இடாதவர் குமரனை நினையாதவர் - என்பது அருணகிரியாரின் தத்துவ உபதேசம்,- பாடல் 57ம் பார்க்க 67. தன் குறை கூறுதல் 1பெறுதற் கரிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக் குறுகிப் பணிந்து பெறக்கற் றிலேன்2மத கும்பகம்பத் தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரச3வல்லி இறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே. (அந்) மதகும்ப. புயனே பெறுதற். கற்றிலேன். (பொ உ) (மதகும்பம்) மதம் பெருகும் (கும்பம்) மத்த கத்தையுடையதாய்க் (கம்பம்) கட்டப்படும் தூணை உடையதாய், அல்லது அசையும் தன்மையை உடையதாய் - (தறுகண்) அஞ்சாமையை உடையதாய்ச், சிறிய கண்களைக் கொண்ட்தாய்ச், (சங்க்ராமம்) போருக்கு உற்றதான (சயிலம்) மலைபோன்ற ஐராவதத்தால் வளர்க்கப்பட்டவளும், (சரச வல்லி) இனிய குணத்தை உடையவளும், கொடி போன்றவளுமான தேவசேனை அழுந்தத் தழுவி (மகிழும்) கடகாசல கடகத்தை அணிந்த பன்னிரு புய மலையோய் பெறுதற்கு அரியதான பிறவியைப் (புண்ணிய வசத்தால்) நான் பெற்றும் . பெற்றிருந்தும் (அந்தோ) உனது சிற்றடியை அண்மிப் (பணிந்துப் பெற பணிந்து (வீடு பேற்றைப் பெறும் வழியைக் (கற்றிலேன்) கற்றேன் இல்லை. (ஈதென்ன பாவம்) - (சு உ) தேவசேனையின் நாயகரே அரிய பிறவியைப் பெற்றிருந்தும், நான் உன்னைப் பணிந்து வீட்டின்பம் பெறும் வழியைக் கற்றேனில்லை. (கு உ) 'பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும் பெறுதற் கரிய பிரானடி பேணார்" - திருமந்திரம் 2090 பிறவியின் அருமை - "அரிது அரிதுமானிடராதல் அரிது"-ஒளவையார். "புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள் நாம் போக்குகின்றோம் அவமே" -திருவாசகம்-பள்ளி எழுச்சி. - மெதுவாய் நழுவி எழுந்து போவார்கள்; ವ್ಹಿ.ಗೆ வேற்குமரனிடம் မွီဒီး க