பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/810

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250. 255. 260. 265. 270. 275. 280. 26 திருமுருகாற்றுப்படை 803 கோடுவாய் வைத்துக் கொடுமணி யியக்கி ஓடாப் - பூட்தைப் பிளிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட ஆண்டாண் டுறைதலு மறிந்த வாறே ஆண்டாண் டாயினு மாகக் காண்டக முந்து நீ கண்டுழி முகனமர்ந் தேத்திக் கைத்ொழுஉப் ப்ரவிக் காலுற வணங்கி நெடும்பெருஞ் சிமயத்து நீலப் பைஞ்சுனை ஐவரு ளொருவ னங்கை யேற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே! வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பிற். பழையோள் குழவி வானோர் வணங்குவிற் றிானைத் தலைவ மாலை மார்ப நூலறி புலவ செருவி லொருவ பொருவிறன் மள்ள அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொன்மலை மங்கையர் கணவ மைந்த ரேறே! வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக நன்செயின்ர்க் கார்த்து மிசைபே ராள அலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேனய் மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள் பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள் ஆர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந குரிசில் எனப்பல யானறி யளவையின் ஏத்தியா னாது நின்னளந் தறிதன் மன்னுயிர்க் கருமையின் நின்னடி யுள்ளி வந்தன னின்னொடு புரையுந் ரில்லாப் புலமை யோயெனக் குறித்தது மொழியா வளவையிற் குறித்துடன் வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியர் சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி