பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/821

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

814 முருகவேள் திருமுறை 111:திருமுறை செருவேற் றானைச் செல்வ! நின் பூசைக்கண் புரிதலுற்ற நரம்பினது ஒலியும், புலவர் பாடிய இயற் பாட்டுக்களும் பொ வேத ஒலியும், உபசாரமாகிய பூவும் தீபமும் கூடி, எரியின்கண் உருகும் அகிலும், சந்தனமும் தூபமாய்க் கமழாநிற்கும் நின் அடியின்கண் உறைதலை எமக்கு உரித்தாக உறையும் பதியைச் சேர்ந்தாற்போல எம் சுற்றத்தோடு கூடியாம் பிரியாதிருப்பேமாக 19. 95-105. குறப்பினாக் கொடியைக் கூடியோய்வாழ்த்துச் சிறப்புணாக் கேட்டி செவி. உடையும் ஒலியலும் செய்யை மற்றாங்கே படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும் உருவும் உருவத்தி யொத்தி, முகனும் விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி எவ்வத் தொல்வா மாமுதல் தடிந்து தெவ்வுக் குன்றத்துத் திருந்துவேல் அழுத்தி அவ்வரை யுடைத்தோய் நீ இவ்வரைமருங்கிற் கடம்பமர் அணிநிலை பகர்ந்தேம் உடங்கமர் ஆயமோ டேத்தினம் தொழுதே (8) - (நப்பண்ணனார் பாட்டு). குறப் பெண்ணாகிய வள்ளியை மணந்தோய்! எம் வாழ்த்தினை நின் செவிக்குச் சிறப்புணவாகக் கேட்டல் வேண்டும். நின் ஆடையும் மாலையும் சிவந்த நிறம் உடையன; அவ்வாறே, நின் வேற்படையும் பவழக்கொடியின் நிறத்தைக் கொள்ளும்; நின் திருவுருவ நிறமும் எரிகின்ற தீயை ஒக்கும். திருமுகமும் இளஞ் சூரியனை நிகர்க்கும். உலகுக்குத் துன்பம் செய்த சூரன்ம் மாமரத்தை அட்டவனே! பகையாய் நின்ற கிரவுஞ்ச மலைமீது வேலைச் செலுத்தி அம் மலையைப் பிளந்தவனே! நீ இந்தப் பரங்குன்றத்தில் கடம்ப மரத்தின்கண் அமர்ந்துள்ள நல்ல நிலையை உடன் மேவிய சுற்றத்தாரோடு துதித்துத் தொழுது வாழ்த்தினேம் (எம் வாழ்த்து இது)