பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/822

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. குறுந்தொகை 815 21. 15-11. தரைவிசும் புகந்த தண்பரங் குன்றம் குன்றத் தடியுறை யியைகெனப் பரவுதும் வென்றிக் கொடியணி செல்வநிற் றொழுது: 66-70. மாறமர் அட்டவை மறவேல் பெயர்ப்பவை ஆறிரு தோளவை அறுமுகம் விரித்தவை நன்றமர் ஆயமோ டொருங்குநின் னடியுறை இன்றுபோல் இயைகெனப் பரவுதும் ஒன்ற்ார்த் தேய்த்த செல்வ நிற் றொழுதே, (9) - (நல்லச்சுதனார் பாட்டு). -- தரையின்கண் நின்று விசும்பையுற ஓங்கியது பரங்குன்றம்: வென்றிக் கொடியை ஏந்திய ... ."நின்னைத் தொழுது இக் குன்றத்து அடியின்கண் உறைதல் மறுபிறப்பினும் இயைக என்று ப்ர்வுகின்றோம். மாற்றாரை அமரின்கண் கொன்ற வீர வேலை உடையை: பன்னிரு தோளை உடையை: ஆறுதிருமுகங்களுடன் விளங்குவை பகைவரை அழித்த செல்வ; உன்ன்ைத் தொழுது, எமக்கு விரும்பின சுற்றத்தோடு கூடி நின் அடிக்கண் உறைதல் ன்றுபோல என்றும் இயைக என்று பரவுகின்றேம். (அருள்புரிவாயாக). - 3. குறுந்தொகை -- o : தாமரை புரையுங் காமர் சேவடிப் பவழத் தன்ன மேணித் திகழொளிக் குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின் நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற் சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே (10) - (பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியது). தாமரை மலரைப் போன்ற அழகிய செம்மையாகிய திருவ்டியையும், பவழத்தை ஒத்த சிவந்த நிறத்தையும், விளங்கா