பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/824

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. 35. 45. 50.

  • 4. கல்லாடம் 817

மணிநிரை சிந்தி மண்புக அலைப்பக் கார்விரிந் தோங்கிய மலைத்தலைக் கதிரென ஒவறப் போகிய சிறைவிரி முதுகிற் புவனங் காணப் புகழொடு பொலிந்தோய் போழ்படக் கிடந்த ஒருபங் கெழுந்து மின்னன் மாண்ட கவிரலர் பூத்த சென்னி வாரனக் கொடும்பன்க யாகித் தேவர்மெய் பனிப்புற வான்மிடை உடுத்திரள் பொரியிற் கொறிப்பப் புரிந்த பொருள்நாடித் தாமரை பழித்த கைம்மருங் கமைத்தோய் ஒருமையுள் ஒருங்கி இருகைநெய் வார்த்து நாரதன் ஒம்பிய செந்திக் கொடுத்த திருகுபுரி கோட்டுத் தகர்வரு மதியோய் முலையென இரண்டு முரட்குவடு மரீஇக் குழற்காடு சுமந்த யானைமகட் புணர்ந்தோய் செங்கட் குறவர் கருங்காட்டு வளர்த்த பைங்கொடி வள்ளி படர்ந்தபுய மலையோய் இமயம் பூத்த சுனைமாண் தொட்டில் அறிவிற் றங்கி அறுதாய் முலையுண்டு) உழல்மதில் சுட்ட தழல் நகைப் பெருமான் வணங்கிநின் றேத்தக் குருமொழி வைத்தோய் ஒமெனும் எழுத்திற் பிரமம் பேசிய நான்மறை விதியை நடுங்குசிறை வைத்துப் படைப்புமுதல் மாய வான்முதற் கூடித் தாதையும் இரப்பத் தளையது விடுத்தோய் கூடஞ் சுமந்த நெடுமுடி நேரி விண்தடை யாது மண்புகப் புதைத்த (5ՔԶ/(Ք தேற நெடுமறை விரித்தோய் ஆறுதிரு எழுத்தும் கூறுநிலை கண்டு நின்றாட் புகழுநர் கண்ணும் பொலிந்தோய் மணிக்கால் அறிஞர் பெருங்குடித் தோன்றி