பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/844

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பழநித் தல புராணம் 837 (3) பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன்மா மயிலாய் போற்றி முன்னிய கருனை யாறு முகப்பரம் பொருளே போற்றி கன்னியர் இருவர் நீங்காக் கருணைவா ருதியே போற்றி என்னிரு கண்ணே கண்ணுள் இருக்குமா மணியே போற்றி. (84) - (சுகப்பிரம. 61) 17. ஆவினன்குடி-பழநித்தலபுராணம் - О :- - (1) வன்பனநா கரவரையான் மதலை ஆகர வரையான் 'இன்ப மயில் வாகனத்தான் ஏற்று மயில் வாகனத்தான் 'அன்பருள மலைவேலான் அணிகொள்'சிவமலை வேலான் நன்கெழுமா வினன்குடியான் நலங்கெழுமா வினன் குடியான். (85) (திருவாவினன்-2). (2) பான்மொழிப் பசும் பாவை செய் போற்றி பூஞ்சரவண பவ போற்றி வான்சுர்ர்க் கருள் கந்தவேள் போற்றி புள்வரை பொடித்தவ போற்றி தேன்மலர்ப் பொழிற் சிவாசல போற்றி சேவலங் கொடியோய் போற்றி நான்மறைப் பொருள் நாயக போற்றி மெய்ஞ்ஞான தேசிகா போற்றி. (86) - (அகத்திய, 44) பாம்பணிந்த சிவனது குமாரன். ' வராக மலையை உடையவன் 3இலக்குமி குடியிருக்கும் மார்பனாம் திருமால், அன்ன வாகனப் பிரமன் போற்றும் மயில் வாகனத்தன். 'அன்பர் உள்ளத்தில் மலைவு (கலக்கம்) வராமல் காப்பவன். 'சிவமலை - பழநி, ".ஆவினன் - இ வாகனச் சிவனது குடியிற் தோன்றியவன்.