பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 83 85. யோகிகளுக்கு உபதேசம் 'காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருத் தைப்புகட்டின் வீட்டிற் புகுதன் மிகவெளி தேவிழி நாசிவைத்து 2மூட்டிக் கபாலமு லாதார நேரண்ட மூச்சையுள்ளே ஒட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே. (அந்) விழிநாசி. யோகிகளே காட்டிற்..... எளிதே (பொ. உ) (விழி) கண்ணோக்கத்தை (நாசி) மூக்கின் (நுனியில்) (வைத்து) பொருந்த வைத்து (மூட்டிக் கபால மூலாதார நேர் அண்ட மூச்சை உள்ளே ஒட்டிப் பிடித்து) . மூச்சை - பிராணவாயுவை மூலாதாரம் மூட்டி - மூலாதாரத்தினின்றும் மூண்டு எழச் செய்து கபாலம் நேர் அண்ட கபாலத்தை நேராக அண்டும்படி உள்ளே (சுழுமுனை நாடி வழியே) ஒட்டி - செலுத்திப் பிடித்து, எங்கும் ஓடாமல் - புறத்தே வேறெங்கும் ஓடாதபடி, (சாதிக்கும்)யோகமுறையிற் சாதிக்க முயலும் யோகிகளேl) (ஏன் இப்படிக் கஷ்டப்படுகின்றீர்கள்) காட்டில் - வள்ளிமலைக் காட்டிலே வளர்ந்த குறத்தி வள்ளியின் நாயகன் - முருகனுடைய திருவடிகளிலே (உங்கள்) கருத்தைப் புகட்டின் நீங்கள் உங்கள் தியானத்தைச் செலுத்தினால் முத்தி வீட்டிற் புகுதல் மிக எளிய காரியமாகும். (இதை அறிந்து உய்ம்மின்கள்) (சு உ) கடினமான யோகாப்பியாசம் செய்யும் யோகிகளே வள்ளி நாயகன் திருவடியைத் தியானித்தால் முத்தி மிக எளிதிற் கிடைக்கும். (கு உ) இந்தச் செய்யுள் நாம் எளிதிற் கடையேற சுவாமிகள் அருளிய சுருக்க வழி உபதேசத்தைக் கொண்டுள்ளது. அவசியம் நாம் அநுட்டிக்க வேண்டியது. பேறு பெறுதற்குச் சுருக்க வழியையே யாவரும் விரும்புவர். குமர குருபரசுவாமிகளும். சரியையிற் றாழ்க்கலை, கிரியையிற் பணிக்கலை, யோகத் துய்க்கலை, பாகமும் நோக்கலை, நாளையின் றென.ஒரு வேளையும் நவிற்றலை, ஈண்டெணக் கருளுதி இறைவ: பூண்டுகொண் டிருப்பனின் பொன்னடித் துணையே - எனப் பிரார்த்தித்துள்ளார். (பண்டார மும்மணி - 29) "வம்பிற் சுற்றாது பரகதி அருள்வாயே!-திருப்புகழ் (945) - பேரின்பம் அடைதற்கு எளிதான வழி, பிரான் பதத்தே கருத்தைப் புகுத்துதல்தான் என்பதற்குச் சான்று அங்ங்ணம் கருத்தைப் புகட்டின வள்ளியே ஆதலின் - காட்டிற் குறத்தி பிரான் என