பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/918

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. ஒளவையார் 911 பழங்களில் ஒட்டிக் கொண்டதால், ஒளவையார் ஒவ்வொரு பழத்தையும் மணல் போக ஊதி ஊதி உண்டனர். பையன் 'ப்ாட்டீ! நீதானே சுடுகிறபழம் வேண்டும் என்றாய்; அதனால் தான் ് ஆறவைத்து உண்ணவேண்டி இருக்கிறது’ எனக் கூறி நகைத்தர்ன். ஒளவையார் ஹாஹா இந்த உண்மை நமக்குப் புலப்படவில்ன்லயே! இந்தப் பையன் அன்றோ என்ன்னப் ப்ரிகசிக்கின்றான் என நிர்ண்ங்கொண்டு வருந்தி கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி இருங்கதலித் தண்டுக்கு நானும் பெருங்கானிற் காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான்தோற்ற திரிரவும் துஞ்சாதென் கண் -- எனப் பாடி ஏக்கம் உற, வேள் ஒளவையாருக்குக் காட்சி அளித்தருள், ஒளவைழ்ார் மெய் புள்கங்கொள்ள் கண்ணில் ஆனந்த வெள்ள அருவி நீர் பாய -செந்தமிழின் திருவுருவே செல்வமக மேரே தித்திக்குஞ் செந்தேனே தெவிட்டாத கரும்பே பைந்தமிழின் நறுங்கனியே பழங் கனிந்த ரசமே பதம்பரவும் அடியார்தம் பவங்களையும் மருந்தே அந்தமிலா முழுமுதலே லேல்மயிலென் றறைவோர் அகத்திலுறு திருவிளக்கே ஆறெழுத்தின் பயனே எந்தமையோர் பொருட்படுத்தி எழுந்ததிருத் துரையே இனியுனது திருவடியை இமைப்பொழுதும் மறவேன்; அம்மை உமை அகமகிழும் ஆனந்தத் துரையே அடலவுணர் குலமுழுதும் அறஎழுந்த துரையே! வெம்மைதடிந் தடியாரை வாழ்விக்கும் துரையே மின்னகுவேல் கரத்தேந்தி விளையாடும் துரையே செம்மைநலம் திரண்டெழுந்த சிங்காரத் துரையே சிகியேறி உலகைவலம் செய்துவரும் துரையே எம்மையுமோர் பொருட்படுத்தி எழுந்ததிருத் துரையே இனியுனது திருவடியை இமைப்பொழுதும் மறவேன்"

  • சேய்த்தொண்டர் புராணம் - ஒளவையார் 79; 80.