பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 9 இடம் : கப்பன் பூங்கா பெங்களூர் நேரம் : LI Fళ ప} உறுப்பினர்: நெடுமுடி, அம்ரிதா குடை ராட்டினமாகக் கவிழ்ந்து இலைகளைப் பூவால் மறைத்திருக்கும் சிவப்புக் கொன்றை மரத்தடியில் நெடுமுடியும் அம்ரிதாவும் அமர்ந்திருக்கின்றனர். வெல்வெட் துண்டுபோல் மெதுவாக நகரும் தம்பலப் பூச்சியின் அழகைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அம்ரிதா. நெடுமுடி: அம்ரிதா! வாழ்க்கை எப்படியிருக்கிறது? அம்ரிதா: வெற்றுத்தாளாக...! அதில் - கோடுகளோ புள்ளிகளோ இல்லை. உணவு, வேலை, தூக்கம்! நெடுமுடி: தூக்கம் - நன்றாக வருகிறதா? அம்ரிதா: ஏன் வராமல்? கனவு கலைக்காத தூக்கம், நெடுமுடி: குறும்புக்காரி! நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டாய்! அம்ரிதா: பின் எப்படிப் பேச வேண்டும்? பாலும் கசந்ததடி-சகியே முருகுசுந்தரம் கவிதைகள் 119