பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுந்த உணர்ச்சித் துண்டங்களாக அத்தரத்தில் தொங்கும் அரைத் தொடர்கள்! இதையா - கவிதையென்று சொல்கிறீர்கள்? எதுகை மோனை ஒசையொழுங்கு எதுவும் இல்லாத குறைப் பிரசவம்! மேகலை: (மெதுவாகச் சிரித்துவிட்டு) இது தான் - இந்த நூற்றாண்டுக் கவிதையின் இன்றைய வடிவம். நம்பி: அப்படியா சொல்லுகிறீர்கள்? மேகலை: ஆமாம் பழைய காலத்தில் கலைகளுக்குப் பொதுத்தன்மை அதிகம், இளங்கோவடிகள் ஒரு கவிஞர் இசை மேதை நாடகாசிரியர். லியானார்டோடாவின்சியும் மைக்கேல் ஏஞ்சலோவும் கவிஞர்களாகவும் கலைஞர்களாகவும் வாழ்ந்தவர்கள். இன்று ஒவ்வொரு கலையும் முருகுசுந்தரம் கவிதைகள் 143