பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேகலை: இப்பாடலில் சுவைத்து மகிழவேண்டியவை அந்த உயிருக்கு ஏற்பட்ட கவர்ச்சியும், அந்தக் கவர்ச்சியிலிருந்து மீள முடியாத அதன் தவிப்பும் தான். வீணாவுக்கு ஏற்பட்டுள்ள கவர்ச்சியும், அதிலிருந்து மீள முடியாத தவிப்பும் என்னவென்று எனக்குப் புரியவில்லை. நம்பி: என்ன சொல்லுகிறீர்கள்? மேகலை: வீணா ஒரு புதிர் அவள் - அடிமனத்தை ஏதோ ஒன்று குடைந்து கொண்டிருக்கிறது. காட்சி 12 இடம் : பல்கலைக்கழக நூலகத்தின் எதிரில் உள்ள புல்வெளி நேரம் : L) {Tడర్ ఇ} உறுப்பினர்: நம்பி, வீனா மாலைக் கதிரவன் சோலைத் செடிகளைப் பசும்பொன் ஆக்கிக் கொண்டிருந்தான். வகுப்புக்கள் முடிந்து ஒவ்வொரு மரத்தின் அடியிலும் ஜோடிப் புறாக்களாக மாணவர் கூட்டம்; தனிமையை விரும்பும் தத்துவ ஞானி போல் ஒதுக்குப் புறத்தில் ஒரு புன்கு மரம்: அதனடியில் கவிஞர் முருகுசுந்தரம் 146