பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்ச்சியூட்டும் சிந்தனையில் நம்பி, வீணா மெல்லென நடந்து வந்து நம்பியின் பின்புறம் நின்றாள். நம்பி திரும்பிப் பார்க்காமலேயே, அவளைப் பெயர் சொல்லி அழைக்கிறான். நம்பி: வா வீணா! வீணா: வந்திருப்பது நான் தான் என்பதை எப்படித் தெரிந்து கொண்டீர்கள்? நம்பி: என் இதயத்துடிப்பு எனக்குத் தெரியாதா? தென்றலின் வருகை கண்ணுக்குத் தெரிகிறதா? வீணா: இல்லை? நம்பி; என்றாலும் - எப்படியோ தெரிந்து கொண்டு பூங்கொடி - நாட்டியம் ஆடுவதில்லையா? அப்படித்தான் வீணா: என்ன? இன்று கற்பனை கரைபுரண்டு ஒடுகிறது, நம்பி: எல்லாம் பழக்க வாசனை தான் முருகுசுந்தரம் கவிதைகள் 147