பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 13 இடம் சொற்கோவின் அறை: மாணவர் விடுதி நேரம் : பின்னிரவு உறுப்பினர்: சொற்கோ, இந்திரஜித், வாணன், கோபி மற்றும் பலர், பல்கலைக்கழகத்தில் ஆண்கள் விடுதிக்கும் பெண்கள் விடுதிக்கும் இடையில் இருந்த வாயில் தற்காப்பின் காரணமாக அடைக்கப்பட்டு, வேறுபக்கம் வழிதிறந்து விடப்படுகிறது. அதனால் ஆண்கள் விடுதியை ஒட்டிய பாதையில் மாணவிகள் வருவது அறவே நின்று போயிற்று. இந்த ஏற்பாடு சில மாணவர்களுக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக சொற்கோவுக்கும் அவன் நண்பர்களுக்கும் இது எரிச்சலூட்டுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்த எண்ணிச் சொற்கோவின் அறையில் கூடுகின்றனர் அவனுடைய நண்பர்கள். சொற்கோ: நண்பர்களே! பல்கலைக்கழக நிர்வாகத்தின் இச் செயல் மாணவர் சமூகத்தின் மரியாதை மீது வீசப்பட்ட அவமானச் சேறு இதை நாம் இப்படியே விட்டு விடக் கூடாது. இந்திரஜித்: உணமைதான, இதற்கு நாம் குனிந்து கொடுத்தால் நிரந்தரக் கூனர்கள் ஆகிவிடுவோம், பின்னர் நம்மால் நிமிர்ந்து நிற்க முடியாமலே போய் விடலாம். முருகுசுந்தரம் கவிதைகள் 164