பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளே வந்திருக்கிறது. இதுபோன்ற அரிப்புகளை இந்திய நாட்டுக் கடற்கரையில் வேறு எங்கும் காண முடியாது. நம்பி: அடந்த காடுகள்! சுற்றிலும்இருண்ட காடுகள்! நெடுமுடி: - அதனால்தான் இவ்விடம் கடத்தல் காரரின் சொர்க்க பூமியாக விளங்குகிறது! (தொலைவில் கரும்புள்ளியாகத் தெரிந்த படகு, இப்போது நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அப்படகில் படகோட்டியோடு தனியாக ஒரு பெண் மட்டும் பயணம் செய்து கொண்டிருக்கிறாள். நெடுமுடியையும் நம்பியையும் பார்த்தவுடன் அப்படகு திடீரென்று ஒரு கடலரிப்பிற்குள் வேகமாக ஒடி மறைகிறது. நம்பி படகில் இருக்கும் பெண்ணையே உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.) என்ன நம்பி! அந்தப் படகையே உற்றுப் பார்க்கிறாய்? நம்பி: படகில் இருந்த பெண்ணின் முகம் எனக்குத் தெரிந்த முகமாகப்பட்டது. நெடுமுடி: யாரென்று நினைவு கூரமுடியுமா? நம்பி: முடியவில்லை (படகைத் திருப்பிக் கொண்டு கரையை அடைகின்றனர்.) முருகுசுந்தரம் கவிதைகள் 2O3