பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அரிவாள்போல் அவரைக்காய்க் கூட்டைச் சாமை அரிசியுடன் கலந்துண்ணும் பாணர்க்(கு) ஆட்டுப் பொரியலுடன் உணவளித்த தாலோ, செம்பொன் பொற்கிழிகள் புலவர்க்குக் கொடுத்த தாலோ, பெருமைவரும் என்றாநீர் எண்ணு கின்றீர்? பெருமையெல்லாம் அச்சோறு நம்வ யிற்றில் செரிக்கின்ற வரையில்தான்; கொடுத்த செம்பொன் செலவழிந்தால் பேகனைநாம் நினைப்பதுண்டா? 'நாட்டியத்து மயிலுக்கும் குளிரி னாலே நடுங்குகின்ற மயிலுக்கும் வேறு பாடு காட்டுக்குள் அறியாத வேந்தன், நாட்டுக் கடமைகளை எவ்வாறு புரிந்து கொள்வான்? வேட்டுக்கும் தும்மலுக்கும் வேறு பாடு விளங்காதா? வெண்டளைகள் விரவு கின்ற பாட்டெல்லாம் வெண்பாவா? காலங் காட்டு பவையெல்லாம் இடைநிலையா? பாட்டு வேந்தே! “போர்க்களத்தின் கொடுமைகளை எடுத்துக் காட்டிப் புவிமன்னர் பகைதீர்க்கும் பரண பேகன் கார்க்கூந்தல் கண்ணகியைப் பிரிந்து வாழும் கதையுமக்குத் தெரியாதா? முல்லை வேலி ஊர்ப்பரத்தை உதடுகளின் கொடைக்கு வள்ளல் உட்கார்ந்து கிடக்கின்றான்; அந்தப் பேகன் வேர்ப்புகழை விளாசுகிறீர்; பாட்டுப் போர்வை விரித்திந்தக் களங்கத்தை மூடு கின்றீர். முருகுசுந்தரம் கவிதைகள் 257