பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவியே! நீங்கள் நண்பர்க் கனுப்பிய கடிதக் கண்ணிர்க் காவியங் கண்டேன்; தீண்டக் கைநடுக் குற்றேன்; உம்மைத் தாவிய உரிமைக் கைகள் தாள்களைத் தொடலாம் என்று தூவிய உம் கருத்துத் தோணியைத் திறந்து பார்த்தேன். கடிதத்தில் கண்ட தெல்லாம் காதல! உங்கள் நெஞ்ச வெடிப்புகள் முறிந்து வீழும் வேதனைத் தூண்கள்; துன்பத் தடிப்புகள்! தீயோர் சுட்ட தழும்புகள் தைத்த புண்கள்! அடிக்கடி கிளம்பு கின்ற அனற்பெரு மூச்சுத் தேர்கள்! கண்களால் உமதெ ழுத்தைக் கவ்விய வுடனே, காய்ந்த புண்களை மீண்டு மின்று புதுப்புண்கள் ஆக்கிக் கொண்டேன். எண்பது முறைப டித்தேன்; இதயத்தில் வீக்கம் பெற்றேன். கண்களே வாயில், ஏங்கும் காதலர் துன்பத் துக்கே! முருகுசுந்தரம் கவிதைகள் 291