பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புல்லர்கள், நமது வாழ்வைப் புரட்டிய இரக்க மில்லார் பல்கலைக் கழக மேறிப் படுகொலைப் பட்டம் பெற்றோர் கொல்வதற் கிலக்காய் உம்மைக் குறிக்கின்றார்; நீரும் நானும் கல்லறைக் குள்ளே கூடக் கண் துஞ்ச ஒப்ப மாட்டார். சிந்தையில் உம்மை எண்ணிச் செபமாலை உருட்டு கின்றேன் நொந்தநம் நைந்த வாழ்வை நூல்களாய் எழுதி, இந்தப் பந்தயச் சமுதா யத்தில் பறையறை வித்தால் என்ன? விந்தையில் வுலகை மீளா வெட்கத்தில் சாய்த்தால் என்ன? கண்ணிரை வடிக்க வேண்டாம் காதலி என்றீர்! பாயும் கண்ணிரே இடுக்கிக் துன்பக் கவலைக்குக் கால்வாய்; உங்கள் எண்ணத்தை நெருப்பு மூச்சை எழுதுங்கள் மடலில்; என்றன் கண்ணிரில் அவையிரண்டும் கலக்கட்டும்; ஒன்றா கட்டும், கவிஞர் முருகுசுந்தரம் 292