பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னையென் குற்றத் தாலே எடைபோட்ட மாமன், என்றன் பெண்மையை மதிக்க வில்லை; பெரும்புகழ் பெற்ற உம்மை அன்னியன், மனிதன் என்ற அளவுகோல் கொண்டு பார்த்தார். என்னுயிர்க் காத லர்நீர் என்பதை எண்ண வில்லை. மாதர்க்கு மங்க லச்சொல் மனைவிதான்; எனினும் உங்கள் பாதியாய் மாறு தற்குப் பற்றுநான் கொள்ள வில்லை. காதலி என்ற சொல்லில் கணிகின்ற உரிமை யின்பம் மோதிரத் திருமணத்தின் முன்னாலே தகர்ந்து போகும். சாவிலே முடியு மிந்தச் சாத்திரத் திரும ணத்தால் காவலும் கட்டுப் பாடும் கடமையும் தோன்றிக் காதல் ஆவலைக் குறைக்கும்; நெஞ்சில் அயல்விருப் பங்கள் தோன்றும்; தாவிடும் காத லின்பத் தரம்மிகக் குறைந்து போகும். முருகுசுந்தரம் கவிதைகள் 295