பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசாங்கப் பதிவேட்டில் மக்கள் பேரை அடுத்துவரும் மதக்குறிப்பு யாவும், சற்றும் இரக்கமின்றி எடுத்தெறியப் படுதல் வேண்டும். இந்நாட்டுப் பொதுப்பணத்தைக் கோவி லுக்கும், குருக்களுக்கும் மானியமாய் அன்பளிப்பாய்க் கொடுக்கின்ற பகற்கொள்ளை ஒழிய வேண்டும். குருத்திளைஞர் பள்ளிகளை மடமை விற்கும் குருக்களிட மிருந்தின்றே மீட்க வேண்டும். கோவிலிலே வழிபாடு நடத்து கின்ற குருக்களுக்கு மாளிகையில் என்ன வேலை? ஆவியுடல் பொருள்யாவும் தொண்டுக் காக அர்ப்பணிக்க வேண்டியவர், அரசாங் கத்துச் சாவியின்மேல் கண்வைத்தால், இனிமேல் இந்தச் சமயத்தின் கடைக்காலே தகர்ந்து போகும். பாவத்தை மன்னிக்கும் குருமார், தாமும் பாவத்தைச் செய்யாமல் இருக்க வேண்டும். நாத்திகமே நம்கட்சி நடுந ரம்பு! நலம்பெருக்கும் விஞ்ஞானத் துணையால், இந்த ஆத்திகத்தின் முதுகெலும்பை முறிப்போம்; நம்மை அழுத்துகின்ற மதச்சுமையை, அறிஞர் நெஞ்சில் பூத்திருக்கும் பகுத்தறிவுக் கொள்கை யாலே புரட்டுதற்கு வழிவகுப்போம்; புரட்சிக் காரர் சாத்திரத்தீ முன்னாலே, சமய மென்னும் சருகென்ன செய்துவிட முடியும் இங்கே? முருகுசுந்தரம் கவிதைகள் ՅO7