பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மீதி நட்சத்திரங்களுக்கு ஆகாயத்தில் மின்னிக் கொண்டே உட்கார்ந்திருப்பது பிடிக்கிறது. ' 'இதற்கு ஏன் அது பிடிக்கவில்லை?" 'சும்மா மின்னி என்ன செய்வது என்று இதற்குத் தோன்றுகிறது... ' நாவலின் மற்றுமோரிடம்: 'பூமியை விட்டுவிட்டு இந்த வானத்தில் ஒட்டிக் கொண்டு இருப்பதில் பயன் என்ன? வாருங்கள் போவோம். இந்த ஆகாயத்தில் நட்சத்திரங்களாக இருப்பதை விட, பூமியில் போய்க்கல்லாக இருப்பது எவ்வளவோ மேல்" என்றன. ஒரு நட்சத்திரம் அறுந்தது. ஓர் உற்கை விழுந்தது. மற்றொரு நட்சத்திரம் அறுந்தது. மற்றோர் உற்கை விழுந்தது. பரபரவென்று நட்சத்திரங்கள் கீழே விழலாயின. பொடி சூர்ணமாகும் போதும் அவை சிரித்துக் கொண்டே இருந்தன. நட்சத்திரங்கள் யாவும் விழுந்தன... இந்தப் புரட்சியைச் செய்தது எது? அந்த முதல் எரிநட்சத்திரம்!... முருகுசுந்தரத்தின் வசன/புதுக் கவிதை நாடகத்தில் எரிநட்சத்திரமாக வருகிறாள் வீணா. தொடக்கத்தில் 'மஹாகவி'யின் மேற்கோளாகக் காட்டப்பட்டிருந்த 'புதிய களங்கள்-புதிய போர்கள்-புதிய வெற்றிகள்-' என்ற சூளுரைக்கேற்ப, நம் காலத்தின் மிகக் கடுமையான பிரச்சினை ஒன்றின் மீது, நம் காலத்துக் கவிஞர் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார். 'அறிவு ஜீவிகள் தங்களைத் தத்துவார்த்த அடிப்படையில் புத்துருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், இது அவர்களது கடமை என்றும், அறிவுஜீவிகள் நடை முறைப் போராட்டங்களில் அக்கறை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் இந்தக் கடமையை நிறைவேற்ற முடியும்". (மனித சமூக சாரம், ப.198) என்றும் மாவோ அறைகூவினார். அந்த அறைகூவல் தமிழ்க் கவிஞர் வழியே ஒரு கவிதை நாடக உருவில் எதிர் கொள்ளப்பட்டிருக்கிறது. 'சர்வதேசியம்-தேசியம் இவை இன்னும் தெளிவுபடாத கூறுகளா? சர்வதேசியம் தேசியத்தை அடக்கி விடுகிறதா? தேசியம்' என்பது சர்வதேசிய உணர்வுக்கு எதிரானதா, கடந்த காலங்களின் விவாதங்களும், போரட்டங்களும் மேலும் மேலும் குழப்பங்களுக்கிடையிலேயே முடிந்துள்ளன. இதனிடையில் எத்தனை எத்தனை மானிடப் பலிகள் எத்தனை எத்தனைக் குருதிப் பெருக்கம்! கவிஞர் முருகுசுந்தரம் 76