முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்
27
என்று தொடங்கும் பாடலை ‘ஜனசக்தி’ தொடங்கிய காலத்திலேயே, அதற்கு எழுதியனுப்பிய பாரதிதாசன் (இந்தப் பாடல் ‘ஜனசக்தி’யின் மூன்றாவது இதழில் 20.11.37இல் வெளிவந்தது) கம்யூனிஸ்டுக் கட்சியில் சேராமல் அல்லது அதன் அனுதாபியாகக் கூட நிலைத்திராமல், திராவிட இயக்கத்துடனேயே சென்றுவிட்டாரோ என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. இதேபோல் சமூகச் சீர்த்திருத்தங்களைப் பற்றிப் பேசுவதும் அதற்காகப் பாடுபடுவதும் சீர்திருத்தவாதமேயாகும், சீர்திருத்தவாதம் அடிப்படையில் பிற்போக்கானதேயாகும் என்று கற்றிருந்த பாடத்தின் வறட்டுக் கோட்பாட்டு நிலையும், கம்யூனிஸ்டுகள் சமூகச் சீர்திருத்த விஷயங்களில் முனைப்பான அக்கறை எதுவும் காட்டாமல் போனதற்கும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால் கம்யூனிஸ்டுகள் சோஷலிச லட்சியத்துக்காகவே போராடினாலும், அதன் காரணமாகப் பொருளாதார உறவுகளையே அடிப்படையாகக் கருத்தில் கொண்டு, வர்க்கப் போராட்டத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்துக்காகவே செயல்பட்டாலும், அவர்கள் ஏனைய துறைகளைப் புறக்கணித்து விடாமல், அரசியல், சமூகம், பொருளாதாரம் கலாசாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் மானிட விடுதலையைக் கொண்டு வருவதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும், அத்தகைய ஒருமித்த Synthetic அணுகுமுறை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது. எவ்வாறாயினும் 1937இல் ‘ஜனசக்தி’ தொடங்கிய காலத்தில் அதில் கலை இலக்கியப் பகுதி எனத் தனியாக ஒரு பகுதி தொடங்கப்படவும் இல்லை முற்போக்கு இலக்கியத்தை வளர்ப்பதற்கோ, முற்போக்கு - எழுத்தாளர் சங்கம் ஒன்றை உருவாக்குவதற்கோ முயற்சி ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
உண்மையில் கம்யூனிஸ்டுக் கட்சி கலை இலக்கியத் துறையில் ஈடுபாடு காட்டத் தொடங்கியது இந்தியா