பக்கம்:முல்லைக்கொடி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 105

புல் கிடைக்கும் இடங்களைத் தேடிச்சென்று வாழும் ஆயர், சேணெடுந் தொலைவு சென்று விடுவ தில்லை. விரும்பும் போதெல்லாம் வீடுகளுக்குச் சென்று வரக்கூடிய அண்மையிலேயே அவர் ஆனிரை மேயும். சிறிது சேனெடுந் தொலைவாயின், தம் நிரையில் கறக்கும் பாலை ஆயர்களே தம் மனைக்குக் கொண்டு சென்று கொடுத்து மீள்வர். அணித்தாயின், ஆயன் மனைவியோ அல்லது மகளோ வந்து கொண்டுசெல்வர். புல் கிடைக்கும் இடந்தேடிப் போன ஆயர், தம் பாடியும், அதைச் சூழ உள்ள புலங்களும் கார்காலத்து மழை பெற்றுப், புல்லாலும் நீராலும் நிறைந்துள்ளன என்பதை அறியின், ஆனிரை களோடு வீடு வந்து சேர்வர். பாடி புகும் ஆயர், போகும் பொழுது ஒன்று கலந்து ஒட்டிச் சென்ற தம் ஆனிரைகளை, அவரவர்க்கு உரியனவற்றை அவரவர் பிரித்துக் கொள்வர். ஒன்று கலந்து பழகிவிட்ட ஆனிரைகளைப் பிரிப்பது அத்துணை எளிதில் நிகழக் கூடியது அல்ல; இடை புகுந்து பிரிக்கும் இடையர், ஆணேறுகளால் தாக்குண்டு துன்புறுதலும் உண்டு.

அத்தகைய அரிய தொழிலாய ஆனிரை ஓம்பும் தொழில் மேற்கொண்ட ஆயர்கள், பாண்டி நாட்டில் பெருங்குடியினராய் வாழ்ந்திருந்தனர். அந்நாட்டில் சிறந்து விளங்கிய ஓர் ஆயர்பாடியைச் சேர்ந்த ஆயர் சிலர் ஒன்று கூடினர். தத்தம் ஆனிரைகளை ஒன்று கூட்டினர். கார் காலத்து மழையால் வளம் பெற்று விளங்கிய புல்வெளி களைத் தேடிப் புறப்பட்டனர். பாற்குடங்களையும், அப் பாற்குடங்களை வைக்கும் உறிகளையும், அடங்காது திரியும் காளைகளையும், கறவைகளையும் அடக்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/107&oldid=707951" இலிருந்து மீள்விக்கப்பட்டது