பக்கம்:முல்லைக்கொடி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 புலவர் கா. கோவிந்தன்

அவற்றின் கழுத்தில் மாட்டும் கழுவையும், குட்டுக் கோலையும், ஒரு பையில் இட்டுச் சுருக்கித் தோளில் மாட்டிக்கொண்டனர்; வாய், சில சமயம் குழலோசையை யும், சில சமயம் எய் எய்' என்பன போலும் பொருளற்ற ஒலிகளையும் எழுப்ப, ஆனிரைகளை ஒட்டிச் சென்றனர்.

களம் புகுந்து கடும் போரிடும் போர் வீரர்கள் போன்ற காளைகளில் ஒரு சில, தம் கால்களால் மண்ணைக் கிளைத்துப் புழுதி எழுப்பின; ஒருசில, தம் கோடுகளால் நிலத்தைக் குத்திப் பிளந்தன; சில, ஒன்றோ டொன்று பகைத்து, எதிர் எதிர் நின்று, இடி இடித்தாற் போல் முழங்கின; சில ஒன்றை ஒன்று தாக்கிக் கடும் போரிட்டன. அவ்வாறு போரிடுங்கால், ஒன்றின் கோடு ஒன்றின் உடம்பில் பாய்ந்ததினால், எருதுகளின் உடம்பெல்லாம் புண்ணாயின; பெற்ற புண் வழியே குருதி ஒழுக ஒடும் காளைகள், நாட்காலையில் மழை பெய்யும் செம்மேகம் போல் காட்சி அளித்தன. அத்தகைய ஏறுகளோடு கூடிய ஆனிரைகளை ஒட்டிச் சென்ற ஆயர், சின்னாள் கழித்து ஊர் திரும்பினர். ,

ஊர் திரும்பிய ஆயர், தத்தம் ஆனிரைகளைப் பிரித்துக் கொள்ளத் தலைப்பட்டனர். ஊர் அடைந்து, ஊர் மன்றில் நின்ற ஆனிரைகளுள், அவரவர்க்குரிய வற்றைத் தனித்தனியே பிரிக்க, அந்நிரையின் இடையே சிலர் புகுந்து இடைவெளி உண்டாக்கினர். இடையே வெற்றிடம் விளங்க, இருபாலும் இரு பிரிவாகப் பிரிந்து நின்று, ஒரு சிறிது நேரமும் ஒய்ந்திராது. ஒடியும் ஆடியும் உழலும் அவ்வானிரைக் காட்சி, நிலத்தைப் படைக்க முன்வந்த நான்முகன், பண்டு அந்நிலத்தை மூடியிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/108&oldid=707952" இலிருந்து மீள்விக்கப்பட்டது