பக்கம்:முல்லைக்கொடி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி ; 119

நின்னை நோதக்கதோ இல்லைமன் நின்நெஞ்சம் அன்னை நெஞ்சாகப் பெறின் !

அன்னையோ?

ஆயர்மகனையும் காதலை, கைம்மிக; 25 ஞாயையும் அஞ்சுதி, ஆயின், அரிதரோ நீயுற்ற நோய்க்கு மருந்து, மருந்தின்றி யான்.உற்ற துயராயின், எல்லா! வருந்துவேன் அல்லனோ யான்.

வருந்தாதி, 30 மண்ணிமாசற்ற நின்கூழையுள், ஏறு, அவன் கண்ணி தந்திட்டது எனக்கேட்டுத் திண்ணிதாத் தெய்வமால் காட்டிற்று இவட்கு என நின்னை அப் பொய்யில் பொதுவற்கு அடைசூழ்ந்தார், தந்தையோடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு." 35

தலைவி, தோழிக்கு அறத்தொடு நிற்பத், தமர் வரைவுடன்பட்டமை, அவளுக்கு அவள் சொல்லியது இது.

1. குரும்பு - முல்லைநிலத்து ஊர். இவர் - பரந்திருக்கும். 6. சில்லை - சினமிக்க, மறை - மறு, 7. கோட்டங்காழ் - வளைந்த மாலை, ஆட்டிய - அலைக்கழித்த, 8. இரும் - கரிய, பொங்க - துள்ளிக் குதிக்க; 9. கூழை - கூந்தல். 15. பெய் போது - சூடிக் கொள்ளும்பூ 21. வெய்யன் - விருப்பம் உடையவன். 25. கைம்மிக - அளவுகடந்து 26, ஞாய் - தாய், 33. தெய்வமால் - திருமாலாகிய தெய்வம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/121&oldid=707965" இலிருந்து மீள்விக்கப்பட்டது