பக்கம்:முல்லைக்கொடி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

காஞ்சிக்கீழ்ச் செய்தேம் குறி!

முல்லை நிலத்து மங்கை அவள்; தாயும் தந்தையும், உற்றாரும், உடன் பிறந்தவரும் கொண்ட பெரிய குடியில் பிறந்தவள். கடமைக் குணம் நிறைந்தவள்; நாள்தோறும், மோர்க் கூடை தலையில் ஏந்தி, முல்லை நிலத்தை அடுத் திருந்த மருத நிலத்து ஊர்களுக்குக் காலையில் சென்று, ஆங்கு மோரை விற்றுவிட்டு, நண்பகற் பொழுதிற்குள் வீடு திரும்புபவள்; பின்னர்க் கொல்லையில் கன்றுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் தாயின் பணியைத் தான்் ஏற்றுக் கொண்டு, மாலைவரை இருந்து மேயவிட்டு ஒட்டி வருவாள். -

மயிலின் கழுத்து மின்னுவது போல், மைபோலும் கருநிறம் வாய்ந்தது அவள் மேனி என்றாலும், நல்ல அழகி அவள். பணைபோல் பருத்த தோள்கள்; இளம் மாவடுவை இரண்டாகப் பிளந்து வைத்தாற் போலும் பெரிய விழிகள்; முல்லை அரும்பும், மயில் இறகின் அடியும்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/122&oldid=707966" இலிருந்து மீள்விக்கப்பட்டது