பக்கம்:முல்லைக்கொடி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 121

வரிசையாக அமைந்த வெண்பற்கள்; பிறைபோல் வளைந்து சிறுத்த நெற்றி, சீறடி சிற்றிடை: இத்தகைய உறுப்பு நலங்களை உடையவள் அவள். அவளை ஒரு முறை கண்ட கண்கள், வேறு ஒரு பெண்ணை நோக்க விரும்பா; அவள்மீது சென்ற பார்வை எளிதில் மீளாது; அவளைக் கண்டால் காமனும் தோற்று விடுவன்; தன் கைப்படையை நழுவவிட்டு நடுங்குவன்.

நாள்தோறும் அவள் மோர்க் கூடை சுமந்து செல்வதை, அவள் செல்லும் வழியில் குறுக்கிட்டு ஒடும் கானாற்றங்கரையில், செம்முல்லைக் கொடியும், காயாம் பூவும் மலர்ந்து மணக்கும் பொழில் நிழலில் தன் மாடுகளை மேயவிடுத்துக், கால் கடுக்காவாறு கோலூன்றி நின்று காத்துக் கிடக்கும் இளைஞன் ஒருவன் கண்டு, காதல் கொண்டான்.

ஒருநாள், அவள் வழக்கம் போல், மோர் விற்றுவிட்டு வெறுங் கூடையோடு வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து விட்டான் அவன்; அன்று, அவன் காதல் வெறி பிடித்து அலைந்தது; அதனால் வருவாளை வழிமறித்து நிறுத்தினான். "பெண்ணே ! பகை வெல்லும் பக்குவம் தெரிந்த நம் பாண்டி நாட்டுப் படை, ஒரிடத்தே பெருகியும், ஓரிடத்தே குறுகியும் நின்று போரிட்டுப் பகைவரை வென்று அழிப்பதுபோல், அல்குலும், தோளும், கண்ணும் அகன்று காட்ட, அடியும், இடையும், துதலும் சிறுத்துக் காட்டச் சிரித்த முகத்தோடு வருகின்றவளே! உன் பேரழகின் வடிவு காணின், காமனும் படை விட்டு வருந்துவன் என்றால், என் நிலை யாதாம்! பாண்டியர் படை எடுப்பின், பகைவர் உயிர் இழத்தல் உறுதியாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/123&oldid=707967" இலிருந்து மீள்விக்கப்பட்டது