பக்கம்:முல்லைக்கொடி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ↔ புலவர் கா. கோவிந்தன்

போல், உன் பேரழகுப் படை என் உயிரைப் போக்கி விடுகிறது. ஏடி! பெண்னே! இவ்வாறு வருத்த, நான் உனக்கு என்ன பிழை செய்தேன்?" எனக் கூறித் தன் காதல் நோயைக் காட்டிக் கொண்டான்.

மோர் விற்கச் செல்பவள் வழியில் மாடுமேய்த்துக் கிடக்கும் அவனை நாள்தோறும் காண்பாள்; அவன் தலையில் சூடிக் கொள்ளும் காயாம்பூக் கண்ணி, கட்டி யிருக்கும் கருமை கலந்த செந்நிற ஆடை, இவற்றோடு கூடிய அவன் அழகுத் தோற்றம், கோலூன்றி நின்றவாறே நிரை காக்கும் அவன் கடமையுணர்ச்சி ஆகிய அவன் அகப்புற நலங்களைக் கண்டு, அவளும் அவன் மீது காதல் கொண்டிருந்தாள். ஆனால், அதைக் காட்டிக் கொள்ள வில்லை; அவள் ப்ெண்மை அவளைத் தடுத்து விட்டது; மேலும், அவ்வழியாகத் தன்னைப் போல் செல்லும் மகளிர் பலராவர்; இவன் தன்னைக் கண்டு காதல் கொள்வது போன்றே, அம் மகளிர்பாலும் மனம், பறிகொடுத்திருப்பனோ என்ற ஐயம் அவளுக்கு. அதைத் தீர அறிந்து கொள்ளாது, அவனோடு தொடர்பு கொள்ளுதல் கூடாது என்று எண்ணினாள். அதனாலும் அவள் தன் காதலைக் காட்டிக் கொள்ளவில்லை. மாறாக, அவனை வெறுப்பவள்போல் நடந்து கொண்டாள்.

அதனால், அன்றுவரை அவனை எதிர் நின்று நோக்குவதோ, அவனோடு பேசிப் பழகுவதோ செய்யாது சென்றவள், அன்று அவன் தன்னை வழிமறிக்கவே, அவனோடு பேசத் துணிந்தாள். பேசத் தொடங்கியவள், அவனோடு பேசக் கிடைத்த இந் நல்வாய்ப்பைப் பயன் கொண்டு, அவன் உள்ளத் தூய்மையை உணர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/124&oldid=707968" இலிருந்து மீள்விக்கப்பட்டது