பக்கம்:முல்லைக்கொடி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி ; 123

விரும்பினாள். அதனால், அவனை வெறுப்பவள் போல் நோக்கி, "ஏடா! என் தாய் தந்தையர் ஆயர் குலத்தவர்; அவ்வாயர் பெற்ற மகள் நான். அதனால் எம் குலத் தொழிலாகிய மோர் விற்பது மேற்கொண்டு வாழ்கிறேன்; அதில் ஏதும் குறையில்லை. அதில் குறை காணும் நீயும் ஒர் ஆயனோ! உறுதியாக நீ ஆயன் அல்லை; நீ உண்மை யான ஆயனாயின், கோலூன்றி நின்று, நிரைகளைக் கருத்தோடு காக்கக் கடமைப்பட்ட நீ, அதை மறந்துவிட்டு, வழிவரும் மகளிர் மேல் விழி வைத்து நிற்பையோ? அவ்வாறு நிற்க, நீ என்ன, ஞாயிற்றின் மகன்போல், உலகு காக்கப் பிறந்தவனோ" எனக் கூறிக் காதலை மறந்து கடமை நெறி நிற்பவள் போல் நடித்தாள்.

அவள் கூறிய கடுசொல் அவன் உள்ளத்தைப் புண் படுத்தி விட்டது; அவளோடு மேற்கொண்டு சொல்லாட வும் அஞ்சினான். ஆயினும் அவள் அழகுத் தோற்றம், அவனை அடிமை கொண்டு விட்டது. அதனால், "பெண்ணே ! உன் பேரழகு பிறரால் பாராட்டப் பெறாது பாழாகிறது; உன் அழகை நீயே பாராட்டிக் கொள்வதில் பெருமையில்லை; இதை உணராத நீ எனக்கு அறிவூட்ட வந்து விட்டாய்; உன்னோடு பேசி வெல்ல வல்லவர் யார்? உன்னோடு நான் வாய் திறக்கவில்லை!" எனத் தன்காதலும் கலக்கமும் ஒருங்கே தோன்றக் கூறினான்.

அது கேட்ட அவள், "சரி, அங்ங்ணமாயின், நீ ஒன்றும் பேச வேண்டாம்; அதை நானும் நின்று கேட்க வேண்டாம் !" எனக் கூறிவிட்டு நடக்க முற்பட்டாள்.

அவள் போகப் புறப்படுவதைக் கண்ட இளைஞன், "பெண்ணே உன்னோடு பேச விரும்பவில்லை என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/125&oldid=707969" இலிருந்து மீள்விக்கப்பட்டது