பக்கம்:முல்லைக்கொடி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 புலவர் கா. கோவிந்தன்

தான்் கூறினேனே ஒழிய, உன்னைப் போக விடுவேன் எனக் கூறவில்லை; ஆகவே, போகாதே; உன்ன்ைப் போக விடேன்!” என்று கூறி வழிமறித்தான்்.

வழிமறித்த அவன் செயல் கண்டு, நெஞ்சே! இவன் செய்யும் கொடுமையைப் பாரேன் ! எனத் தனக்குள்ளே கூறிக் கொண்டவாறே, அவனை விழித்து நோக்கி, "ஏடா! வழியில் வருவாரும் போவாரும் சொல்லும் சொற்களை யெல்லாம் கேட்டு மயங்கும் குழவிப் பருவத்தள் அல்லள் யான். நீ கூறும் எதையும் நான் கேட்க விரும்பவில்லை. அவ்வாறாகவும், நான் விரும்பாத சொற்களைச் கூறி வழிமறித்து நின்று, என் மோர்க் கூடையைப் பிடித்துக் கொண்டு, இது என்ன மோரா? இதன் விலை யாது? இது என்ன பாலா? ஒரு பொற்காசுக்கு எத்தனை ஆழாக்கு? இது என்ன நெய்யா? எவ்வளவு நெல்லுக்கு ஓர் உழக்கு நெய் ? எனக், கடன் வாங்கியவர்களைக் கடன் கொடுத்தவர்கள் வழி மறித்துக் கொண்டு, தாம் கொடுத்த பணத்திற்கு ஈடாக அவர்பால் கொள்ளலாம் பண்டங்கள் என்னென்ன உள எனக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்பதுபோல், உள்ளே வஞ்சம் வைத்து, வேண்டாத வினாக்களை விடுக்கின்றனையே! உன்பால் நான் வாங்கிக் கொண்ட பொருள் யாதோ?” எனக் கேட்டுச் சீற்றம் கொண்டாள். - -

அவள் சீற்றம் கண்டு அவன் சிறிதும் கலங்கவில்லை. மாறாக, அவளை நோக்கி நகைத்தவாறே, பெண்ணே! கானாற்றங்கரையில் உன்னை முதல் முதலாகக் கண்ட அன்றே, உன் கண்களால் என்னை ஆர நோக்கி, எனக்கு உரிய என் உள்ளத்தை உனக்கு உரியதாக ஆக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/126&oldid=707970" இலிருந்து மீள்விக்கப்பட்டது