பக்கம்:முல்லைக்கொடி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி ↔ 125,

கொண்டு, அதில் உரிமையோடு ஏறி அமர்ந்து கொண்டாயே, அதை மறந்து பேசும் நீ ஒரு கள்ளி யல்லையோ?” என்றான்.

அவன் சொல் அவளுக்கு மகிழ்ச்சி அளித்தது. அவன் உள்ளத்தை அவள் புரிந்து கொண்டாள். அதனால், அவள் மனம் சிறிதே நெகிழ்ந்தது; அதனால் சொல்லில் பொய்யாகவும் சினம் கலக்க அவளால் இயலவில்லை; பொய்ச் சினம் காட்டவும் மறந்து விட்டாள். அதனால், "ஏடா! உன் நெஞ்சை நான் அடிமை கொண்டேன் என்று கூறுகின்றனையே, அதனால், எனக்கு என்ன பயன்? அது எனக்கு எளிதும் அல்லவே? உன் நெஞ்சு, புனத்தில் பயிர்த் தொழில் மேற்கொண்டிருக்கும் என் அண்ணன்மார்க்கு உணவு கொண்டு கொடுக்குமோ? புலத்தில் மாடு மேய்த்துத் திரியும் என் தந்தைக்குக் கறவைக் கலம் கொண்டு கொடுக்குமோ? தினை அரிந்த தாள்களை மேயுமாறு கன்றுகளை அவிழ்த்து விடுத்துக் காத்திருக்கும் தாயை, எனக்குப் பதிலாகச் சென்று அனுப்பிவிட்டுத் தான்் காத்துக் கிடக்குமோ? இவற்றுள் எதையும் செய்ய வல்லதன்றே உன் நெஞ்சு! அவ்வாறாகவும், அதை அடிமை கொள்வதில் எனக்கு என்ன பயன்?” எனக் கூறி நகைத்தாள்.

அது கேட்ட அவன், நான் அவள் அன்பிற்கு மீளா அடிமையாதலை அவள் விரும்புகிறாள்; அவ் அன்பில் குறை நேர அவள் விரும்பவில்லை என்பதையே அவள் சொற்கள் அறிவுறுத்துகின்றன என உணர்ந்தான்். அதனால், "பெண்னே! நீ ஏவும் தொழில் அத்தனையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/127&oldid=707971" இலிருந்து மீள்விக்கப்பட்டது