பக்கம்:முல்லைக்கொடி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ஒ. புலவர் கா. கோவிந்தன்

என் நெஞ்சு ஏற்றுச் செய்யும். அதற்கு யானும் உடன் படுகிறேன்!” என, உறுதி உரைத்தான்்.

உறுதி உரைத்தவன், தன் உறுதி உரையால் அவள் உள்ளம் தேறித், தன் காதலுக்கு உடன்பட்டிருப்பள் எனத் துணிந்தான்். அதனால், அவளை அணுகி, "பெண்ணே ! ஊர் மிக மிக அண்மையில் உளது; அங்கு மோர் கடையும் ஒசை இங்கு நன்றாகக் கேட்கும். அவ்வளவு அண்மையில் உள்ள ஊருக்குப் போக, இவ்வளவு விரைவு வேண்டிய தில்லை. மேலும், பொழுதோ நண்பகற்பொழுது. வெய்யி லின் வெப்பம் தாங்க முடியவில்லை. வழியும், கால் வைக்க இயலாவாறு, காய்ந்து கிடக்கிறது; அத்தகைய கொடுமை மிக்க வழியில், கால் கொப்புளிக்க இப்பொழுதே செல்ல வேண்டாம். பெண்னே! முல்லையும் தளவமும் மலர்ந்து மணக்கும் காயாம் பூஞ்சோலையைக் காண்; அதை அடுத்துத் தோன்றும், பெண் யானை படுத்து உறங்குவது போலும், பெரிய பெரிய பாறைகளைப் பார்; வெட்டி வைத்த பனங்காயில் விளங்கும் நுங்குக் குழிகள் போல், அப்பாறைகளில் ஆங்காங்கே கிடக்கும் சிறு சிறு சுனைகளையும், நுங்குக் குழியின் சுவை மிக்க நீரேபோல், அச்சுனைகளில் நிறைந்து வழியும் குளிர்ந்த நீரையும் பார்; அச்சுனைகளில் நீராடி, அம்மலர்களைப் பறித்துச் சூடி, அப்பொழிலில் மகிழ்ந்து விளையாடிப், பின்னர் வெய்யி லின் வெப்பம் தணிந்த மாலைப் பொழுதில் உன் மனை புகலாம்," என நயமாகக் கூறி வேண்டிக் கொண்டான்.

ஒருத்தி ஒருவனை மட்டுமே மணக்க வேண்டும் என்ற விதியிருப்பது போல், ஒருவன் ஒருத்தியை மட்டுமே மணத்தல் வேண்டும் என்ற கற்பு நெறி கற்றவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/128&oldid=707972" இலிருந்து மீள்விக்கப்பட்டது