பக்கம்:முல்லைக்கொடி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 127

அப்பெண். அதனால் இவன்பால் அக் கற்புநெறி இல்லை யானால், இவனை மணந்து நடத்தும் இல்லறத்தில் இன்பம் காண்பது இயலாது என்று அஞ்சினாள்; அதைக் குறிப்பாக உணர்த்தவே உன் நெஞ்சு என்றென்றும் எனக்கே அடிமையாக வேண்டும் என்றாள். அவனும் அதற்கு உறுதி அளித்தான்். ஆனால், அவன், தான்் குறிப்பால் கூறியதன் பொருள் அறிந்து உறுதி அளித்திருப் பனோ என்று ஐயப்பட்டாள். அவனுக்குத் தன் கருத்தைக் குறிப்பால் உணர்த்துவதை விடுத்து, விளக்கமாகக் கூறி, அவன் மனக் கருத்தை அறிந்து கொள்ளுதல் வேண்டும்; அதன் பின்னரே அவனை மணக்க மனம் இசைதல் வேண்டும் என்று எண்ணினாள். அதனால், அவனைப் பார்த்து, "ஏடா! நீ மாடு மேய்க்கும் இவ்வழியாகச் செல்லும் மகளிர் பலர்; அவர்களைப் பார்த்துப் பழகியும் உள்ளாய் நீ; அவர்களில் பலர், உன் உருவும் உரையும் கண்டு, மயங்கியிருப்பர்; மேலும், நீ மேய்க்கும் மாட்டு மந்தையில், ஓர் ஏறு பல பசுக்களின் பின் கூசாது திரிவதைப் பார்த்துப் பார்த்துப் பழகிய நீ, பல மகளிரை மணந்து வாழ்வதில் தவறு இல்லை என எண்ணவும் கூடும்; மகளிரை மயக்குவதில் அரிய திறன் உண்டு உனக்கு, கண் விழித்துக் காத்துக் கொண்டிருக்கும் போதே அடித்துக் கொண்டு போகும் கள்வன் நீ; அதனால், உன்னால் நான் பயன் பெறுவதோ, என்னால் நீ பயன் பெறுவதோ இயலாது. ஆகவே, உன் காதல் மொழிகளை என்பால் கூறுவதை விடுத்து, உன் மொழி கேட்டு மயங்குவாரிடத்தில் சென்று கூறு," எனக் கூறினாள்.

அவள் கூறிய குற்றச் சாட்டினைக் கேட்டு அவன் வருந்தினான். "பெண்னே! நீ கூறியவாறு, நான் மகளிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/129&oldid=707973" இலிருந்து மீள்விக்கப்பட்டது