பக்கம்:முல்லைக்கொடி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ஜ் புலவர் கா. கோவிந்தன்

பலரைப் பார்த்துள்ளேன், பார்த்ததினால்தான்் ஒரு பேரழகியின் பெருமையைக் காண முடிந்தது. நான் பார்த்த மகளிர் பலர். ஆனால், அவருள் ஒருத்திக்கேனும், உன்பால் உள்ள அழகில் ஒரு சிறு கூறும் இல்லை. இது உண்மை. காதல் நோயால் வருந்தும் என்னைக் கொல்வது போல் நோக்கும் கருவிழிகள்; கூரிய பற்கள்: அன்று கொய்த மாந்தளிர் போலும் மென்மையும் நிறமும் வாய்ந்த மேனி. இந்த அழகு அவருள் ஒருத்திக்கேனும் இல்லை. உன்னைக் காட்டிலும் சிறந்தவள் இம் மண்ணுலகில் எவருமே இல்லை. இதை நான் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்; அதன் பயனாகவே, என் காதலியாய் உன்னை ஏற்றுக் கொண்டேன். இது உண்ம்ை; நீ கருதுமாறு நான் கருத்தால் பிழையுடையேனல்லன். நம் குலக் கடவுளாம் திருமால் அடிகளைத் தலையால் வணங்கிக் கையால் தொட்டுச் சூளுற்றுக் கூறுகிறேன், நான் கூறுவது உண்மை!” எனக் கூறிச் சூளுற்றான்.

சூளுற்ற பின்னரும் அவனை மறுப்பது மாண்பா காது என்று எண்ணினள் அப்பெண். ஆயினும், அவனைக் கண்டு பழகிய அவ்வூர்ப் பெண்களுக்கு அவள் சிறிது அஞ்சினாள். அவனை மணக்கத் தன்னைப் போலவே பேராசை கொண்டிருக்கும் அப் பெண்கள், அவன் தனக்குச் சூளுற்றதை அறியாமல், அவனை மணக்க முன்வரினும் வருவர்; அவ்வாறு வருவார்க்குத் தன் முடிவினைக் கூறி, இவன், அவர் ஆசையை அழிப்பதும் செய்வன்; என்றாலும், அத்தகைய இடர்ப்பாடு உண்டாகாவாறு காத்துக் கொள்வது பெரிதும் நலமாம். வருமுன் காப்பவனே விழுமியோன் ஆவன், என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/130&oldid=707974" இலிருந்து மீள்விக்கப்பட்டது