பக்கம்:முல்லைக்கொடி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 129

எண்ணினாள். அதனால், "அன்ப, உன் காதலை ஏற்றுக் கொள்கிறேன்; ஆயினும், கலந்து பழக இது ஏற்ற இடமன்று; அதற்கு ஏற்ற காலமும் இஃது அன்று. இன்று மாலை, எங்கள் சிறு குடியில், நம் நாடாளும் பாண்டியன் பல்லாண்டு நெடிது வாழ்க என வாழ்த்த வேண்டிக் கடவுளை வணங்கிக் குரவைக் கூத்தாடுவர். அக்காலமே ஏற்ற காலமாம். அப்பொழுது, எங்கள் தோட்டத்தில், காஞ்சி மரத்தின் கீழ் வந்திருப்பேன்; குரவைக் கூத்தைக் காண வந்திருக்கும் அப் பெண்கள்-அவர்கள்தாம், நீ பலமுறை பார்த்துப் பழகியவர்கள், உன்னை மணக்க மனப்பால் குடித்திருக்கும் மங்கையர்-உன் வருகையை, உன்னை நேரில் கண்டோ, நீ வரும் அரவம் கேட்டோ அறிந்து கொள்ளா வகையில், மறைந்து வந்து சேர்வாயாக!” என இசைந்து, விடைபெற்று வீடு சென்றாள்.

‘இகல்வேந்தன் சேனை இறுத்தவாய் போல அகல் அல்குல், தோள், கண் என மூவழிப் பெருகி, நுதல், அடி, நுசுப்பு என மூவழிச் சிறுகிக், கவலையால் காமனும் படைவிடு வனப்பினோடு அகல் ஆங்கண் அணைமாறி அமைந்து பெயருங்கால் 5 நகைவல்லேன் யான் என்று என் உயிரோடு படைதொட்ட இகலாட்டி! நின்னை எவன் பிழைத்தேன், எல்லா! யான்:

அஃது அவலம் அன்றுமன.

ஆயர் எமரானால், ஆய்த்தியேம் யாம்மிகக்; காயாம்பூங்கண்ணிக் கருந்துவர் ஆடையை மேயும் நிரைமுன்னர்க் கோல் ஊன்றி நின்றாய்"

முல்லை-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/131&oldid=707975" இலிருந்து மீள்விக்கப்பட்டது