பக்கம்:முல்லைக்கொடி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T4

எனவே, சோழ நாட்டவரா அன்றிப் பாண்டிய நாட்டவரா இவர் என்று நம்மால் அறுதியிட்டுக் கூறவிய லாது எனினும், முல்லைக் கலியின் பாடல்கள் இவரைப் பாண்டி நாட்டார் என்றே காட்டுகின்றன என்று மட்டும் முடிவாகக் கூறலாம்.

மேலும், மன்னர் மரபுள் வந்தவர் இவர் என்பதும் ஐயத்திற்கு இடன் தருவதேயாகும். ஆயர்களுடன் ஒன்றிக் கலந்து உறவாடி வாழ்ந்த வாழ்வினராயிருக்க வேண்டும் என்பதற்கு, இவர் நூலின் அமைவே சான்றாக நின்று வலியுறுத்துகின்றது.

முல்லைக் கலியுள் வரும் பாடல்கள் பலவும், காட்டும் திட்பஞ் செறிந்த ஆயர் குடியினரின் வாழ்வு துணுக்கங்கள் பலவும், ஆயருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் இவர் என்பதை, நமக்குச் சொல்லாமற் சொல்லிக் காட்டுகின்றன.

ஆயர் குடியிற் பிறந்த பெரும்புலவர் இவர் என்றோ, அல்லது, வேறு எக்குடிப் பிறந்தாரேனும், ஆயர் குடியின ரோடு பலகால் கலந்து பழகி உறவாடி வாழ்ந்த நிலை யினர். இவர் என்றோ, அல்லது ஆயர்தம் வாழ்வின் நயத்தை அறிந்து, அதனைப் பாடும் ஆசை மேலெழ, அதற்காக ஆயரிடை சென்று நுணுகிக் கண்டு உரைத்தவர் என்றோ நாம் இவரைக் கருதலாம். நிலையான முடிவு எதுவும் நாம் கொள்வதற்கில்லை. எனினுங்கூட ஆயர் வாழ்வினை நன்கு அறிந்த இயல்பினர், பாண்டியர் புகழ் பாடும் பாவலர் என்று மட்டும் இவரைப் பற்றி நாம் தெளிவாக ஐயத்திற்கிடன் இன்றிக் கூறலாம். அறிஞர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/16&oldid=707860" இலிருந்து மீள்விக்கப்பட்டது