பக்கம்:முல்லைக்கொடி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

பெருமக்கள் தீர ஆய்ந்து முடிவு செய்தற்கு உரிய செய்தி இது.

ஆயரின் வாழ்வு

தமிழறிஞர் வகுத்த ஐவேறு வகையான நிலப்பகுப்பி னுள், ஆயர் குடியினர் காடும் காடு சார்ந்த நிலமுமாகிய முல்லை நிலத்தின்கண் வாழ்ந்தவராவர். இந்நிலப் பகுதிகள் மேய்ச்சல் தரைகள் நிறைந்ததாக விளங்கும் எனக் கண்டோம். தம் நிரைகளை ஒட்டிச் சென்று வளமான புல்வெளிகளிலே வயிறார மேய்த்துக் கான் யாறுகளிலே நீருட்டிக் குழலிசைத்து வாழ்ந்து மகிழ்வது ஆயரின் இயல்பு. ஆயர் அனைவரும் இவ்வாறு ஊரை அடுத்தும் தொலைவிலுமாக அமைந்த மேய்ச்சல் பகுதிகளிலே பொழுதெல்லாம் தொழில் மேற்சென்று வாழ்வர்.

அவர்க்குப் பொழுதுக்குக் கஞ்சி கொண்டு செல்வதும், கறந்த பால் குடங்களிற் சுமந்து வீடு கொணர்வதும், அதனைக் காய்ச்சி உரை குத்தி மோராக்கிக் கடைந்து, மோரும் தயிரும் நெய்யும் மருத நிலங்களின் ஊர்களிற் சென்று விற்பதும், ஆய்ச்சியர் மேற்கொண்ட பணிகளாகும். மேலும் நிரைகளைத் தொழுவத்தினின்றும் ஆயர் ஒட்டிச் சென்ற பின்னர், கன்றுகளைத் தளைந்து காப்பதும், பிறவும் ஆயர் மகளிர் இயல்பாயிற்று.

ஆநிரைகள் பசும்புல் மேய்ந்து வளமான உடற்கட்டுடன் அந்நாளில் விளங்கின. காட்டிலே மனம் விரும்பிய அளவு வளமான புல்லை வயிறாரத் தின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/17&oldid=707861" இலிருந்து மீள்விக்கப்பட்டது