பக்கம்:முல்லைக்கொடி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

அவை, கட்டுடன் வன்மையுடன் விளங்கியதில் சிறிதும் வியப்பில்லை. ஆகவே, அவற்றைக் கண்காணிக்கும் ஆயரும் அவற்றிடையே திமிர் கொண்ட அடலேற்றையும் அடக்கியாளும் வல்லமையுடன் விளங்கினர். ஆயர், அவ்வாறு வலிய உடற்கட்டுடன் விளங்க வேண்டும் என்பதே, அந்நாளைய ஆயர் குடியினரின் வழி வழி வந்த மாறாத குறிக்கோள்.

அத் தகுதியில்லாதவர் தம் ஆநிரைகளைக் காத்து நிற்கவியலாது, அவற்றின் போக்கிலே விட்டுவிட நேரும். அதனால், அவை கட்டுப்பாடற்றுத் திரிந்து, இவர்தம் கட்டுப்பாடுள் நிலையாக நில்லாது போய் விடவும் ஏதுவாகும். எனவே, ஆயர் தம் கன்னியர்க்குரிய மணவாளரை உறுதி செய்யும்போது, அவர்தம் உள்ளம் காதலாற் பிணிப்புண்டதா எனக் கருதுவதுடன் மட்டும் அமையாது, கொல்லேறு தழுவினானுக்கே எம்மகள் கொடைக்கு உரியர் என்றே உரைப்பர்.

ஐவகை நிலத்தவருள், ஆண்மை யுடையார் எங்கணுமே பாராட்டப் பெறுவர் என்றாலும், அவர்க்கே எம்மகள்; அதற்கு அவர் தகுதியற்றார் எனின், எம்மகளும் அவர்க்கு இல்லை என உரைத்தல் கிடையாது. இவ்வாறு, திருமணம் செய்து தனிக் குடும்பத்தின் தலைவனாக விளங்கப் போகும் ஒருவன், கொல்லேறு தழுவும் ஆண்மையாளனாக இருத்தல் வேண்டும் என்று வகுத்த ஆயரின் வாழ்வு இலக்கணம் எவ்வளவு சிறப்புடையது எனக் காணுங்கள்!

தத்தம் நிரைகளோடு காட்டகத்தே சென்று விடுபவர் ஆயர். அவர்தம் இல்லத் தலைவியரோ கன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/18&oldid=707862" இலிருந்து மீள்விக்கப்பட்டது