பக்கம்:முல்லைக்கொடி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேணியும், உணவு சமைத்தும் ஆக வேண்டிய இல்லக் கடமைகளில் ஈடுபடுவர். அவர்க்குப் பிறந்த மக்கள், தக்க வயதும் பருவமும் வந்ததும், ஆண் மக்கள் தந்தைமாருக்கு உதவியாகவும், பெண் மக்கள் தாய்மார்க்கு அவர்தம் தொழிலில் உதவியாகவும் இருத்தல் இயல்பு.

தகப்பன்மார்க்கு உதவியாகக் காளையர், தம் நிரைகளோடு காட்டகத்தே சென்று, அவற்றைக் காத்து நிற்கக், கன்னியர் தம் பெற்றோர்க்கும், உடன் பிறந்தார்க் கும் உணவு கொண்டு செல்வர்; அங்கே கறந்த பால் வீடு கொணர்வர். மோரும் தயிரும் நெய்யுமாக மாற்றிய பின், அதனைத் தலைமேற் சுமந்து சென்று மருத நிலத்து ஊர்களிலே விற்று வருவர். அவர் சென்று வரும் ஒயிலே ஒரு தனியழகு என்பர் இலக்கிய ஆசிரியர்கள்.

இவ்வாறு, குலத்தொழில் மேற்கொண்டு, காளையர் காட்டகத்தே தனித்துச் செல்வதும், கன்னியர் தனித்துச் செல்வதும், ஆயர் வாழ்வின் இயல்பாகவே, அவருள் யாதாமொரு ஆயர்குல இளைஞனும் கன்னியும், தம்முள் தாமே கண்டு கலந்த காதல் உடையராவதும், இயற்கை யின் நியதிக்கு ஒத்ததாயிற்று. o

இவ்வாறு, காதல் வலையிலே பிணிப்புண்டு, களவிலே உறவாடி மகிழ்ந்த ஆயர்குலக் கன்னியும், காளை யும் ஊரறியப் பெற்றோர் இசைவுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்; அதன் பின்னரே அவர் தம் தனித்த இனித்த இல்வாழ்வு தொடங்கும். -

அந்தக் கன்னியின் பெற்றோர், நல்ல ஆனேற்றுக் கன்று ஒன்றினை, வளமுடன் வளர்த்து வருவர். கண்டவர்

முல்லை-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/19&oldid=707863" இலிருந்து மீள்விக்கப்பட்டது