பக்கம்:முல்லைக்கொடி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

அடைசூழ்ந்தார் நின்னை:

ஆயர் இனத்தில், நாகரிகம் மிக்க நல்ல குடியில் பிறந்த ஒரு பெண்ணும், அவ்வாயர்பாடியில் ஆடு வளர்க்கும் குடியில் பிறந்த ஒர் இளைஞனும் ஒருவரை யொருவர் கண்டு காதல் கொண்டனர்; அவ்வாயர் பாடிக்கு அணித்தாகவுள்ள மறைவிடங்களில், மாலை யிலும் காலையிலும், பிறர் அறியாவாறு எதிர்ப்பட்டு மகிழத் தலைப்பட்டனர். வண்ணத்தாலும் வாசனை யாலும் பல்வேறு வகைப்பட்ட மலர்களைப் பறித்து, அவற்றை ஒரு காழ்வடமாகவும், தலைமாலையாகவும் கட்டிக் கொண்டு வந்து தருவதில் அவனும், அவற்றைப் பிறர் எவரும் அறியாவாறு தன் கூந்தலில் சூடிக் கொள்வதில் அவளும் இன்பங் கண்டனர்; இவ்வாறு சில நாட்கள் கழிந்தன.

- அப் பெண்ணுக்கு உடை உடுத்தி, உணவும் உணர் வும் ஊட்டி வளர்க்கும் பொறுப்புடையளாய செவிலி, ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/178&oldid=708022" இலிருந்து மீள்விக்கப்பட்டது