பக்கம்:முல்லைக்கொடி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 177

நாள், அவள் தலைக்கு வெண்ணெய் தேய்க்க விரும்பினாள்; அவளை அழைத்து அருகில் அமர்த்தி அவள் கூந்தலை அவிழ்த்து விரித்து விட்டாள்; உடனே, அன்று அவன் சூட்டிய மலர், அவள் கூந்தலிலிருந்து கீழே விழுந்தது; எதிர்பாராதது நிகழ்ந்து விட்டது; வழக்கமாக, மாடுகளை மேய்க்கவும், பாலும் தயிரும் விற்கவும் வெளியில் சென்றிருப்பவராய தந்தையும் தாயும், அன்று வீட்டிலேயே இருந்தனர்; தான்் வளர்க்கும் மகள் கூந்தலில், தான்் சூட்டாத புதுப்பூ இருக்கக் கண்டு செவிலி நாணினாள்; தன் வளர்ப்பு முறையில் தவறு நேர்ந்து விட்டது; உடனிருந்து வளர்க்கும் தான்், அதை அதுகாறும் அறியாதிருந்தது அவளைப் பெரிதும் நாணப் பண்ணிற்று.

தன் மகள் கூந்தலிலிருந்து தான்் பார்க்காத புதுப்பூ வீழ்ந்ததையும், தன் மகளை வளர்க்கும் சிறந்த தாயாகிய செவிலி, அதைக் கண்டு கலங்குவதையும் பெண்ணைப் பெற்றவள் பார்த்து விட்டாள். நாகரிகம் அறிந்தவள் அந்நற்றாய்; பருவத்தின் விளைவு இது என உணர்ந்த பண்புடையவள்; மகள் மணப்பருவம் பெற்று விட்டாள்; அவள் தனக்குரிய காதலனையும் தான்ே தேர்ந்து கொண்டாள்; இனி, அவளுக்கு மணம் முடித்து விடுதல் வேண்டும் என்ற முடிவினை அப்பொழுதே கொண்டாள்; அதனால், புதுப்பூவைப் பார்த்தவள், ஏது இப்புது மலர்? சூட்டியவர் யார்? புதுமலர் சூட்டிக் கொள்ள எங்குக் கற்றுக் கொண்டாய்? எத்தனை நாட்களாக இப்பழக்கம்?" என எதையும் கேட்டிலள். மகள் மீதோ, அவளை வளர்க்கும் பொறுப்புடையளாய செவிலி மீதோ சிறிதும் சினம் கொண்டிலள்; பார்த்தும் பாராதவள் போல் போய் விட்டாள். ஆனால், மகள் கொண்ட காதல் என்னென்ன

முல்லை-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/179&oldid=708023" இலிருந்து மீள்விக்கப்பட்டது