பக்கம்:முல்லைக்கொடி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

சேரிக் கிழவன் மகளேன் யான்

ஆயர்குல இளைஞன் ஒருவன், தன் ஆயர்யாடியை யடுத்த காட்டு வழியில், ஆடு மாடுகளை மேய விடுத்துக் காத்துக் கிடந்தான்்; மாலைக் காலம் வந்தது. அப்போது அவ்வழியாக, அவ்வாயர்பாடித் தலைவன் மகள், கையில் ஒரு மலர்க் கூடையை ஏந்தியவாறே, காட்டிலிருந்து வந்து கொண்டிருந்தாள். அவளை அவன் முன்னரே அறிவான்; அறிந்திருந்தது மட்டுமன்று, அவள்பால் அவனுக்குக் காதலும் உண்டு; அவளும் அவனைப் பண்டே கண்டு காதல் கொண்டிருந்தாள்; ஆனால் அன்றுவரை, ஒருவர் உள்ளத்தை யொருவர் அறிந்து கொள்ளும் வாய்ப்பு வாய்க்கவில்லை. அது அன்று வாய்த்து விட்டது. மேலும், அப் பெண்ணின் அன்றைய தோற்றம் இளைஞன் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து விட்டது. கலப்பற்ற பொன்னை ஒட உருக்கி அதில் நீலமணி வைத்து இழைத்த அணியின் நிறத்தை வென்றிருந்தது அவள் மேனி. கோங்கின் முற்றாத இளம் முகைபோல் வளர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/190&oldid=708034" இலிருந்து மீள்விக்கப்பட்டது