பக்கம்:முல்லைக்கொடி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ 189

வனப்பளித்தன, தொய்யில் வரைந்த அவள் இள முலை கள். அப்பெண்ணின் இவ்வழகிய திருவுருவைக் காணக் காண, அவள்பால் அவன் கொண்ட் காதல் அடக்க இயலாவாறு பெருகிற்று. அதனால், மலர்க்கூடையேந்தி, வீடு நோக்கி வருவாளை வழி மறித்து நிறுத்தினான்; அவள் மேனியழகு, வளர் முலை வனப்புகளைப் பாராட்டினான். அவன் அவ்வாறு பலப்பல கூறிப் பாராட்டவும், அவள் வாய் திறந்திலள். அதனால் அவன் வருத்தம் மிகுந்தது; அவள் மொழி கேட்கும் ஆர்வம், அவன் உள்ளத்தில் வளர்ந்தது. "பெண்ணே! உன் கையில் இருப்பது யாது?" என வலிய எதிர் சென்று வினவ நின்றான். -

செல்வ வாழ்விற் கேற்ற செருக்குடையவள் அப் பெண். அதனால் பிறர் அணுகவும் அஞ்சும் பெருவாழ் வினளாய தன்னைத் தடுத்து நிறுத்தியது தவறு என்பதை இளைஞனுக்கு எடுத்துக் காட்ட எண்ணி, "ஏடா! இவ்வூராளும் தலைவன் மகள் நான்!” என்று கூறினாள். செல்வச் செருக்கால், அவனை மதியாது, தன் பெருமையைப் பாராட்டியவள், அவன், தன் உள்ளம் கவர் கள்வன் என்ற உணர்வு வரப்பெற்றதும் அடங்கினாள்; அவன் வினாவிற்கு விடையளிக்கவும் விரும்பினாள். அருள் சுரக்கும் தன் கண்களால், அவனை ஒருமுறை ஆர நோக்கினாள். "அன்ப! கையில் இருப்பது ஒரு புட்டில், விலைக்கு வாங்கியது; இவ்வூர்ப் புலைத்தி பனம்போழ் கொண்டு முடைந்து அளித்தது!" என விடை கூறி, அவ்விடம் விட்டு அகல முயன்றாள். காதலியின் சொல்லினிமை கேட்டு இன்புற்ற இளைஞன், அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/191&oldid=708035" இலிருந்து மீள்விக்கப்பட்டது