பக்கம்:முல்லைக்கொடி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 இல் புலவர் கா. கோவிந்தன்

அழகை, அண்மையிற் சென்று, அருகிலிருந்து நுகர விரும்பினான். அதனால், "பெண்ணே ! உன் கையில் இருப்பது புட்டில் என்பதை நான் அறிவேன்; பார்த்த அளவிலேயே அது புலனாகிறது. நான் அறிய விரும்பியது அதையன்று, புட்டிலுள் இருப்பது யாது? அதைக் கூறு; அல்லது அதைச் சிறிது காட்டு,” எனக் கூறியவாறே அவளருகில் சென்றுவிட்டான்.

"புட்டிலுள் இருப்பது யாது? அதைக் காட்டு," எனக் கேட்டவனுக்கு, அவள், அதைக் காட்டியதோடு நில்லாது, அவனோடு மேலும் சிறிது நாழிகை உரையாடி மகிழ வேண்டும் என்ற வேட்கை மிகுதியால், புட்டிலைக் காட்டியவாறே, "புட்டிலுள் இருக்கும் இம் முல்லை மலர்கள், நானும் என் தோழிமாரும் காட்டின்கண் பறித்தவை!” என்று ೨/೧೯T வேண்டாத விளக்கத்தைத் தான்ே வலியக் கூறினாள்.

ஆயர்பாடித் தலைவன் மகள், தன்பால் வெறுப்போ, வீட்டிற்குப் போக வேண்டும் என்பதில் விரைவோ காட்டாது, தான்் வினவிய வினாக்களுக்கெல்லாம் விடை யளித்தும், தான்் காண விரும்பியதைக் காட்டியும் நிற்கும் அவள் செயலால், அவள் காதற் கருத்தை அறிந்து கொண்ட இளைஞன், அவளை அடைந்து, அவள்பால் காதற் பயன் பெறத் துணிந்தான்். ஆனால், அதை உரைக்க அவன் நாக்கு அஞ்சிற்று. அதனால், புட்டிலுள் இருப்பன முல்லை மலர்கள்,' என அவள் கூறியதும், "பெண்ணே! உன்பால் இருப்பதோ, மணத்திற்கேற்ற மங்கலப் பொருளாய முல்லை மலர்; அம்மலர்களோடு உன்னைக் கண்ட காலமோ, காதற் பயன் பெறுதற்கேற்ற மாலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/192&oldid=708036" இலிருந்து மீள்விக்கப்பட்டது