பக்கம்:முல்லைக்கொடி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 191

காலம்; இடமோ, ஒருவர் உருவை ஒருவர் காணாவாறு காரிருள் சூழ்ந்த, எவரும் எளிதில் புகமாட்டா அரிய இடம்!” எனத் தயங்கித் தயங்கித் தடுமாறித் தடுமாறிக் கூறினான். அந்த அளவு கூறியவன், "சூழ்நிலை கூட்டத்திற்கு ஏற்றது; அதைப் பெறத் துடிக்கிறது என் உள்ளம்!” என்பதைக் கூறமாட்டாது விழித்தான்். விழித்தது மட்டுமன்று, அந்த அளவு கூறியதற்கும், அவள் என்ன நினைத்துக் கொள்வாளோ, அதனால் என்னென்ன ஏதங்கள் நேருமோ எனவும் அஞ்சிற்று அவன் உள்ளம். அதனால், "பெண்ணே! செல் எனச் சொல்லி, உன்னைப் போகவிட விரும்புகிறேன் நான். ஆனால் என் அறிவு உன்னைப் போகவிட மறுக்கிறது; தெளிவற்றது; பிறர் பெருமை உணராதது; குறைபாடுடையது; நல்லது தீதுகளை அறியும் திறம் அற்றது என்பதை அறிந்தும், அவ்வறிவிற்கு அடிமைப்பட்ட என் உள்ளமும் உன்னைப் போகவிடாது தடுத்து நிறுத்தி விட்டது!" என்று கூறித் தன் துணிவைப் பையப் பையத் தெரிவித்தான்்.

"மாண உருக்கிய நன்பொன் மணி உறீஇப் பேணித் துடைத்தன்ன மேனியாய் ! கோங்கின் முதிரா இள முகை ஒப்ப எதிரிய தொய்யில் பொறித்த வனமுலையாய்! மற்றுநின் கையது எவன்? மற்று உரை. 5

கையதை, சேரிக்கிழவன் மகளேன்யான்; மற்று இஃதோர் மாதர்ப்புலைத்தி விலையாகச் செய்ததோர் போழில் புனைந்த வரிப்புட்டில், புட்டிலுள் என்உள? காணதக்காய் ! எற்காட்டிக் காண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/193&oldid=708037" இலிருந்து மீள்விக்கப்பட்டது